Wednesday, October 3, 2012

வீட்டில் வேலையே செய்யாமல் தப்பிப்பது எப்படி?




ஆபீஸ்லதான் நச்சு நச்சுன்னு உயிர வாங்குறானுங்கன்னா, வீட்டுக்கு வந்தா சப்பாத்தி சுடு, வெங்காய்த்த வெட்டு, பாத்திரம் கழுவு, டாய்லெட்ட கழுவுன்னு பெரிய கொடுமையா இருக்குன்னு நம்ம சிரிப்பு போலீஸ் ரமேஷ் கண்ணுல தண்ணி வெச்சிட்டார்....  அவருக்கு சிலபல ஐடியாக்கள் கொடுத்து இப்போ அவர கொஞ்சம் தெம்பா நடமாட விட்டிருக்கோம். அதே மாதிரி நாட்ல பல பேர் இருக்காங்க, அதுனால அவங்களுக்கும் பயன்படனும்னு சொல்லி அத ஒரு பதிவா போடுங்கன்னு அவர் கால்ல விழுந்து கெஞ்சுனதால இப்போ இந்த பதிவு.





1. வீட்டுக்கு ஆபீஸ்ல இருந்து போகும் போது எல்லாம் கைல ஏதாச்சும் ஆபீஸ் டாகுமெண்ட்ஸ் எடுத்து வெச்சுக்குங்க. அதுக்காக முக்கியமான டாகுமெண்ட எடுத்துட்டு போயி அதுல ரசம் கொட்டி டேமேஜர்கிட்ட வாங்கிக்கட்டிக்க வேணாம். ஏதாச்சும் கிழிச்சிப்போட வேண்டிய பேப்பர்ஸ் இருந்தா அத எடுத்துட்டு போனா போதும்.  வீட்டுக்கு வந்த உடனே அந்த பேப்பர்களை போட்டு சும்மா பொரட்டிக்கிட்டு இருங்க. அத பார்த்தாவே போதும், வீட்டம்மா உங்க பக்கத்துல கூட வரமாட்டாங்க. கில்மா பார்ட்டீஸ் ஏதாச்சும் கிளுகிளு கதைகளை பிரிண்ட் பண்ணி எடுத்துட்டு போய் ஆபீஸ் டாகுமெண்ட்ஸ் நடுவுல வெச்சிப் படிக்கலாம். ஆனா எக்குத்தப்பா மாட்டிக்கிட்டா அப்புறம் நிர்வாகம் பொறுப்பல்ல.






2. வீட்டுக்கு போன உடனே கம்ப்யூட்டர்ல போய் உக்காந்துடுங்க. ரெண்டு எக்செல், ரெண்டு வொர்டு ஃபைல் ஓப்பன் பண்ணிவெச்சிட்டு நீங்கபாட்டுக்கு ஃபேஸ்புக், ப்ளாக்னு மேயலாம். ஆனா என்ன வீட்டம்மா பக்கத்துல வரும் போது மூஞ்சிய கொஞ்சம் சீரியசா வெச்சிகிட்டு  வொர்டு/ எக்செல் ஃபைலுக்கு போய் எதையாவது நோண்டனும்....... பட் மூஞ்சில பதட்டமே தெரியப்படாது பீ கேர்ஃபுல்...........





3. அப்புறம் இருக்கவே இருக்கு போன். மொபைல எடுத்து ஏதாச்சும் ஆபீஸ் நம்பருக்கு டயல் பண்ணி, ரிங் போகமுன்னாடி கட் பண்ணிடுங்க. அப்புறம் காதுல வெச்சி படு சீரியசா, எஸ் சார், ஓகே சார், நைட்டே முடிச்சிடுறேன் சார் அப்படின்னு வெரப்பா பேசுங்க (பீ கேர்புல், போன் சைலண்ட் மோடுல இருக்கனும்). அதுக்கப்புறம் வீட்டம்மாவே உங்க டேபிளுக்கு வந்து சாப்பாடு ஊட்டிவிடவும் வாய்ப்பு இருக்கு. பட் இத அடிக்கடி யூஸ் பண்ணா சந்தேகம் வந்துடும், மாட்டிக்கிட்டா எல்லா வழிகளும் அடைபட்டிரும்...அப்புறம் காலம்பூரா கைல கரிச்சட்டியும் பினாயிலும்தான்....






4. நீங்க ஒரேடியா டேபிள்லயே உக்காந்திருந்தாலும் மாட்டிப்பீங்க. அதுனால கொஞ்ச நேரத்துக்கு ஒருவாட்டி எந்திரிச்சி உலாத்தனும். மூஞ்சிய கொஞ்சம் சீரியசா வெச்சிட்டு காத்துலயே கணக்கு போடனும். அப்பப்போ வீட்டம்மா கிட்ட ஏதாச்சும் கேட்கனும், இன்னிக்கு என்ன கிழமை..... போனமாசம் 5-ம் தேதி எங்க போனோம் அப்படின்னு டக் டக்குனு கேட்கனும்.... பதில் சொல்ல முன்னாடி ஓகே ஓகேன்னு சொல்லிட்டு மறுக்கா போய் கம்ப்யூட்டர்ல/ஆபீஸ் டாகுமெண்ட்ஸ்ல உக்காந்துடனும். அப்புறம் ரொம்ப டயர்டாகிட்ட மாதிரி அப்பப்போ கொட்டாவி விடுறதும் நல்லது. இதுக்கு  டீ, காபி, ஸ்னாக்ஸ்னு நல்ல பலனும் கிடைக்க வாய்ப்பிருக்கு.



இது இம்புட்டு கஷ்டமாடா....?


5. இன்னொரு முக்கியமான விஷயம், நீங்க ஆபீஸ்ல இருந்து கொண்டு வந்த பேப்பர்சை அடுத்த நாள் காலைல எடுத்துட்டு போகனும். மறந்தீங்கன்னா தொலஞ்சீங்க. மேட்டர் ஓவர். சும்மா சோம்பேறித்தனமா அதே பேப்பர்களை திரும்ப திரும்ப கொண்டு வரக்கூடாது. கண்டுபுடிச்சிடுவாங்க. வெறும் பேப்பர்களுக்கு பதிலா ஃபைலா கொண்டுவரலாம், பட் ஆபீஸ்ல மாட்டிக்காம கொண்டுவரனும். இல்லேன்னா அப்புறம் நெலமை ரெண்டுபக்கமும் இடிவாங்குற மத்தளமாகிடும்.





6. கடைசியா ரொம்ப ரொம்ப முக்கியமான பாய்ண்ட். இந்தப் பதிவ உங்க வீட்டம்மா படிச்சிடாம இருக்கனும். படிச்சிட்டாங்கன்னா அப்புறம் ஏற்படும் பின்விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது.


அப்புறம் ஒரு சின்ன வெளம்பரம்.......... பாத்து படிச்சு எப்படியாவது பெரியாளாகிக்குங்க......!




நன்றி: கூகிள் இமேஜஸ்....!

Friday, September 14, 2012

சம்பந்தமே இல்லாமல் ஒரு பதிவு...!




ஒரு ஊர்ல 4 விஞ்சாணிகள் இருந்தாங்க. அவங்க வேல மிருகங்களை பத்தி ஆராய்ச்சி பண்றது. குரங்குகளை பத்தி ஆராய்ச்சி பண்ணலாம்னு 10 குரங்குகளை புடிச்சிட்டு வந்து பெரிய கூண்டுல அடைச்சாங்க. கூண்டுக்குள்ள பெரிய வாழைத்தார தொங்க விட்டு, பக்கத்துல ஒரு ஏணியவும் வெச்சாங்க. வாழைப்பழத்த பார்த்த உடனே ஒரு குரங்கு உடனே ஏணில ஏற ஆரம்பிச்சது. ஏணில ஏறுன உடனே சுத்தி பயங்கர குளிர்ச்சியான தண்ணிய எல்லா குரங்குகள் மேலயும் பீச்சி அடிச்சாங்க. மேல ஏறுன குரங்கு தண்ணி வேகம் தாங்காம கீழே வந்துடுச்சு. அது ஏணில இருந்து இறங்கின உடனே தண்ணிய அடிக்கிறத நிப்பாட்டிட்டாங்க. 




கொஞ்ச நேரத்துல இன்னொரு குரங்கு அதே மாதிரி வாழைப்பழத்த சாப்பிடலாம்னு ஏணில ஏற தொடங்குச்சி. அது ஏணிய தொட்ட உடனே மறுபடியும் அதே மாதிரி குளிர் நீர் பீச்சுனாங்க. தாங்க முடியாம ஏறுன குரங்கும் உடனே இறங்கிடுச்சு. இப்படியே தொடர்ந்து 3 வாட்டி நடந்துச்சு. குரங்குகள் எல்லாத்துக்கும், அந்த ஏணிய டச் பண்ணா எல்லார் மேலேயும் குளிர்நீர் பீச்சியடிக்கும்னு புரிஞ்சிடுச்சு. அதுனால எல்லாம் அமைதியா உக்காந்திருச்சுங்க.



அப்போ கூண்டுக்குள்ள இருந்து ஒரு குரங்க வெளில எடுத்துட்டு, புதுசா ஒரு குரங்க உள்ள விட்டாங்க. அதுக்கு தண்ணி மேட்டர் எதுவுமே தெரியாதே. உள்ள போன உடனே வாழைப்பழத்த பார்த்துட்டு ஏணி பக்கத்துல போச்சு. அத பார்த்த உடனே மத்த குரங்குகள்லாம் ஓடிவந்து புதுக் குரங்க ஏணிய டச் பண்ண விடாம இழுத்துட்டு வந்து போட்டு அடிச்சதுங்க. புதுக்குரங்குக்கு ஒண்ணுமே புரியல. ஏணில ஏறுனா அடிப்பாங்கன்னு நெனச்சிட்டு சும்மா உக்காந்துச்சு. 



இப்ப,இன்னொரு பழைய குரங்க வெளில எடுத்துட்டு இன்னொரு புதுக்குரங்க உள்ள விட்டாங்க, அதுவும் வாழைப்பழத்த பார்த்துட்டு ஏணில ஏற முயற்சி பண்ணி மத்த குரங்குகள்கிட்ட அடிவாங்கிச்சு. ஏற்கனவே உள்ள போன புதுக்குரங்கும் அடிக்கிறதுல சேர்ந்துக்கிச்சி. உள்ள வந்த புதுக்குரங்குக்கும் எதுக்கு இப்படி போட்டு அடிக்கிறாங்கன்னு தெரில. 



இப்படியே ஒவ்வொரு குரங்கா வெளில எடுத்துட்டு ஒரு புதுக்குரங்க உள்ள விட்டாங்க. கொஞ்ச நேரத்துல எல்லா பழைய குரங்கும் வெளில வந்துடுச்சு.உள்ள புது குரங்குகள் மட்டும்தான். அப்பவும் எல்லாம் மத்த குரங்குகளை ஏணில ஏற விடாமே அடிச்சிட்டு இருந்துச்சுங்க. ஆனா அதுக எதுக்கும் வாழைப்பழத்த எடுக்க ஏணில ஏறுனா குளிர்ந்த நீர் பீச்சி அடிக்கும், அதுனாலதான் ஏறவிடாம அடிக்கிறோம்னு எதுவும் தெரியாது. முன்னாடி இருந்த குரங்குங்க, அடிச்சது, நாங்களும் அடிக்கிறோம்னு அடிச்சிட்டு இருந்துச்சுங்க. இப்படித்தாங்க உலகத்துல பல விஷயங்கள் நடக்குது......... பட் இதுக்கும் பதிவர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதுங்கோ..... 




நன்றி: கூகிள் இமேஜஸ், இது கார்ப்பரேட் கம்பெனிகளில் இருக்கும் ஒர்க் கல்ச்சர் பற்றி கிண்டலடிக்கும் ஒரு பழைய கதை... அவ்வளவே!

!

Wednesday, September 12, 2012

கெளம்புங்கண்ணே கெளம்புங்க......


























என்ன பாக்குறீங்க.......... நம்ம ஹண்ட் ஃபார் ஹிண்ட் கேம் (Hunt for Hint-2) தொடங்கிருச்சுங்கோ.... உடனே கெளம்புங்கங்கோ..........






நன்றி: கூகிள் இமேஜஸ்..............
!

Friday, September 7, 2012

சைக்கிளும், அழகியும் பின்னே டெரர் பாண்டியனும்.....!




டெரர் பாண்டியன்,  இம்சை அரசன் பாபு, சிரிப்பு போலீசு ரமேஷ், மாலுமி நாலு பேரும் ஒரு டப்பா கார்ல எங்கேயோ போய்ட்டு இருந்தாங்க, திடீர்னு நட்ட நடுக்காட்டுக்குள்ள கார் ரிப்பேராகிடுச்சு, என்னென்னமோ பண்ணியும் ஸ்டார்ட் ஆகலை. சரி நாலு பேரும் நடந்தே போகலாம்னு முடிவு பண்ணாங்க, அப்போ ரமேஷ் வெறுங்கையோட நடக்கறதுப் பதிலா கார்ல இருந்து எதையாவது எடுத்துக்கிட்டோம்னா காட்டுக்குள்ள போகும் போது உதவியா இருக்கும்னு சொன்னார். அத நம்பி(?) எல்லாரும் கார்ல இருந்து ஆளுக்கொண்ணா எடுத்துக்கிட்டாங்க.

டெரர் பாண்டியன் கார் ரேடியட்டரை எடுத்துக்கிட்டார். இம்சை அரசன் பாபு  கார் சீட்டை கழட்டிக்கிட்டார்.  சிரிப்பு போலீசு ரமேஷ்  கார் கதவை கழட்டி வெச்சிக்கிட்டார். மாலுமி உடனே கார் சாவிய எடுத்து பாக்கெட்ல போட்டுக்கிட்டார். எல்லாருக்குமே குழப்பம், ஒவ்வொருத்தரும் ஏன் அந்த பொருளை எடுத்தாங்கன்னு. அதுனால காரணம் சொல்லிக்கிட்டாங்க. 

டெரர் பாண்டியன் : காட்டுக்குள்ள போகும் போது தாகம் எடுத்தா ரேடியேட்டர்ல இருந்து எடுத்து குடிச்சுக்குவேன்....

இம்சை அரசன் பாபு:  நான், டயர்டாகிட்டா இந்த கார் சீட்டை கீழ போட்டு உக்காந்துக்குவேன்....

சிரிப்பு போலீசு ரமேஷ்: போகும் போது ரொம்ப வேர்த்தா கார் கதவுல விண்டோவை இறக்கி விட்டுக்குவேன்...........

மாலுமி: நடந்து போயிட்டு இருக்கும் போது கார் சாவிய வெச்சி ஸ்டார்ட் பண்ணி பார்த்துட்டே வருவேன், திடீர்னு ஸ்டார்ட் ஆகிட்டா நடக்க வேண்டியதில்லைல....?


********




டெரரு ஒரு சைக்கிள்ல போயிட்டு இருந்தாரு, அப்போ எதிர்த்தாப்ல ரமேஷ் வந்தார், 


ரமேஷ்: டேய் சைக்கிள் நல்லாருக்கே, இது எப்படி உனக்கு கெடச்சது?


டெரர்: ஒரு அழகான பொண்ணு, இந்த சைக்கிள்ல வந்துட்டு இருந்தா.. என்ன பார்த்து டபுள்ஸ் வர்ரியான்னு கூப்புட்டா, நானும் சேர்ந்து போனேன். தனியா ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போயி திடீர்னு ட்ரெஸ்ஸ அவுத்து போட்டுட்டா.... 

ரமேஷ்: அய்யய்யோ... அப்புறம்.......?

டெரர்: நான் பயந்துட்டேன், அத பாத்துட்டு அவ சொன்னா உனக்கு எது பிடிச்சிருக்கோ எடுத்துக்கோன்னு....

ரமேஷ்: நீ என்ன பண்ணே.....?

டெரர்: நான் உடனே நல்லதா போச்சுன்னு இந்த சைக்கிளை எடுத்துட்டு வந்துட்டேன்... எப்பூடி?

ரமேஷ்: ஆமாமா.... அவ ட்ரெஸ்ஸு உனக்கு சைஸ் சரியா வராதுல... நீ சரியாத்தான் பண்ணி இருக்கே.....!


********



ஒரு வக்கீலு, கொலக்கேசு ஒண்ணுல வாதாடிட்டு இருந்தாரு. கேசு முடிஞ்சு தீர்ப்பு சொல்ற டைம் வந்துடுச்சு. கேஸ் தோத்து போற நெலமை. சரி கடைசியா ஒரு முயற்சி பண்ணி பார்க்கலாம்னு தன்னோட பிரம்மாஸ்திரத்த எடுத்து விட்டார்.

வக்கீல்: கனம் கோர்ட்டார் அவர்களே, கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நபர் இன்னும் 5 நிமிடத்திற்குள் கோர்ட்டிற்கு வந்து ஆஜராகுவார்....!

எல்லாருக்கும் ஒரே அதிர்ச்சி, சைலண்ட்டா 5 நிமிசம் வெயிட் பண்ணாங்க, யாரும் வரலை. 

ஜட்ஜ்: என்ன நீங்க சொன்ன மாதிரி யாரும் வரலையே?

வக்கீல்: ஆனா நான் அப்படி சொன்னதும் நீங்க எல்லாரும் கோர்ட் வாசலையே பாத்துட்டு எதிர்பார்த்து காத்திருந்திங்க, சோ அவன் உயிரோட வர வாய்ப்பிருக்குன்னு நம்பி இருக்கீங்க, அப்படின்னா அந்த கொலை மேல உங்களுக்கு இன்னும் சந்தேகம் இருக்கு, அந்த சந்தேகத்தின் அடிப்படையில் என் கட்சிக்காரரை விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இதை கேட்ட உடனே எல்லாரும் அதிர்ச்சியாகிட்டாங்க. ஜட்ஜ் சிரிச்சிக்கிட்டே தீர்ப்பை வாசிச்சார். கொலை நிரூபணம் ஆகி, ஆயுள் தண்டனைன்னு தீர்ப்பாகிடுச்சு. உடனே நம்ம வக்கீல், அது எப்படின்னு மறுபடியும் வாதாடுனார்.

ஜட்ஜ்: நீங்க அவர் உயிரோட வருவார்னு சொன்னதும் நாங்க எல்லாரும் எதிர்பார்ப்போட வாசலை பார்த்துட்டு இருந்தது உண்மைதான், ஆனா உங்க கட்சிக்காரர் வாசலை பார்க்கவே இல்லையே.......?

வக்கீல்:???!!!!



நன்றி: கூகிள் இமேஜஸ், ஜோக்குகள் மெயிலில் வந்தவையே

!

Tuesday, September 4, 2012

நாங்கள்லாம் அப்பவே இப்படித்தான்.....!




எனக்கு ஒரு ரூம்மேட் இருந்தான். அவன்கிட்ட கொஞ்ச நேரம் பேசுனா பைத்தியமே தெளிஞ்சிடும் அப்படி கருத்தா பேசுவாப்ல. அவனுக்கும் (?) ஒருநாள் கல்யாணம் நிச்சயமாகுச்சு. ஊருக்கு போய்ட்டு வந்தான். வரும் போது பொண்ணோட செல்நம்பரையும் வாங்கிட்டு வந்துட்டான். அங்க ஆரம்பிச்சது பிரச்சன. அட அதுல எனக்கென்ன பிரச்சனைங்கிறீங்களா? அத ஏன் கேட்கிறீங்க, நைட்டு விடிய விடிய எஸ்.எம்.எஸ் வந்துட்டே இருக்கும், இவரும் அனுப்பிக்கிட்டே இருப்பாரு. ராத்திரி பூரா செல்லு க்கீ.. கீன்னு கத்தி கதறிட்டே கெடக்கும். டேய் சைலண்ட்ல வைடானா கேட்கவே மாட்டான். ஒருவாட்டி சத்தமில்லாம ஆள் கக்கூஸ்ல இருக்கற நேரமா பாத்து நான் அதை சைலண்ட்ல போட்டு வெச்சேன். கொஞ்ச நேரம்தான். பழையபடி ஆரம்பிச்சிட்டான். அந்த நாதாரிக்கு செல் கத்துறது அந்தப்புள்ள பேசுற மாதிரியே இருந்திருக்கும் போல. டெய்லி நைட்டு செல்போன் சிணுங்கிட்டே இருக்கறதும், நான் திட்டுறதுமா இருந்து இருந்து எனக்கும் அலுத்து போச்சு, நைட்டு தூக்கமும் போச்சு. 



இப்படி போய்ட்டு இருக்கும் போது ஒரு நாள் நைட்டு என் மொபைலுக்கு ஒரு புது நம்பர்ல இருந்து மெசேஜ், ஹாய்னு... நானும் பதிலுக்கு ஹாய்னு அனுப்பிச்சேன். உடனே அந்த நம்பர்ல இருந்து ASL, pls னு மெசேஜ்... அடங்கொன்னிய அவனா நீய்யி........ன்னு ஷாக்காகிட்டேன். பயபுள்ள குத்துமதிப்பா ரூட்டுவிட்டு பாக்குது போல என்னடா இது இப்படி கெளம்பிட்டானுங்களே, என்ன பண்ணலாம்னு யோசிச்சேன். பக்கத்துல திரும்பி பாத்தா நம்ம ரூம்மேட்டு அவரு வுடுப்பீக்கு தாறுமாறா மெசேஜ் டைப் பண்ணிட்டு இருந்தாரு. தக்காளி எப்படியும் இவன் இன்னிக்கும் நம்மளை தூங்க விடப்போறதில்ல,  அதுனால அந்த புது நம்பர்கூட கொஞ்ச நேரம் வெளையாடுவோம்னு  நான் 24 வயசு பொண்ணு, டெல்லில ஒரு ஸ்டார் ஹோட்டல் ரிசப்சனிஸ்டா இருக்கேன், இப்போ நைட் டூட்டில இருக்கேன்னு ரிப்ளை போட்டேன்.






அந்த மெசேஜ பாத்துட்டு பய ஆடிப் போயிட்டான், ஆஹா சூப்பர் டிக்கட்டு ஒண்ணு சிக்கிருச்சுன்னு மளமளமளன்னு மெசேஜா அனுப்ப ஆரம்பிச்சான். சமாளிக்கவே முடியல. கொஞ்ச நேரத்துல கடுப்பாகிடுச்சு, இவனை என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருந்தேன். அப்போ ஒரு ஐடியா வந்துச்சு. உடனே செல்ல எடுத்து இது என்னோட ஆஃபீஸ் நம்பரு, அதுனால என்னோட பர்சனல் நம்பருக்கு மெசேஜ் பண்ணுன்னு நம்ம ரூம்மேட் நம்பரை அந்த புது நம்பர் பார்ட்டிக்கு அனுப்பிட்டேன்....... அப்புறம் பார்க்கனுமே நம்ம ரூம்மேட்ட..... ஏற்கனவே வுடுப்பிகிட்ட இருந்து நிக்காம மெசேஜா வந்து கொட்டிட்டு இருந்துச்சு, இப்போ நான் இவனையும் வேற கோர்த்துவிட்டுட்டேனா....... பயலுக்கு ரெண்டு கையும் பத்தல. கொஞ்ச நேரத்துல மேட்டர் தலைக்கு மேல போய்டுச்சு, அந்த புதுநம்பர் பார்ட்டியும் விடாம மெசேஜ் அனுப்பிட்டு இருக்கான். வுடுப்பியும் அனுப்பிட்டே இருக்கு.. பயலுக்கு சமாளிக்க முடியல. நைசா செல்ல ஆஃப் பண்ணிட்டு கம்முன்னு படுத்துட்டான். அப்பாடான்னு நானும் நிம்மதியா தூங்குனேன். 




அடுத்த நாள் காலைல அவன் மறுபடியும் செல்ல ஆன் பண்ணி 1 நிமிசம்தான், அந்த புதுநம்பர் பார்ட்டி மறுபடி மெசேஜ் கொடுக்க ஆரம்பிச்சிட்டான். ரொம்ப ஆபாசமா மெசேஜ் அனுப்பி இருப்பான் போல, இவனால தாங்க முடியல. செல்ல ஆஃப் பண்ணவும் விரும்பல (வுடுப்பி மெசேஜோ, காலோ பண்ணிட்டா?), மெசேஜை படிக்கவும் முடியாம திருதிருன்னு முழிச்சிட்டு உக்காந்திருந்தான். நானும் ரொம்ப கஷ்டப்பட்டு சிரிப்ப அடக்கிட்டு, ஒண்ணும் தெரியாத மாதிரி என்னடா ஆச்சு, ஒரு மாதிரி உக்காந்திருக்கேன்னு கேட்டேன். ஒண்ணுமில்லேன்னு சொல்லிட்டு ஒருமாதிரியா என்னைய பார்த்தான், நான் சரி சரி சீக்கிரம் ஆபீசுக்கு போறவழிய பாருன்னு சொல்லிட்டு சட்டுன்னு எஸ்கேப் ஆகிட்டேன்.

அன்னிக்கு பூரா அவனுக்கு அந்த புதுநம்பர்ல இருந்து கன்னாபின்னான்னு மெசேஜ் வந்திருக்கு. எனக்கே பாவமாத்தான் இருந்துச்சு. கடைசில அந்த மெசேஜ் தொந்தரவு தாங்க முடியாம ஒருவழியா அந்த புதுநம்பருக்கு போன் பண்ணி பேசிட்டான். அவன்கிட்ட வெவரமா நான் பொண்ணு இல்லை இனிமே இப்படி மெசேஜ் பண்ணப்படாதுன்னு கெஞ்சி இருக்கான். நல்லவேளையா அதுக்கப்புறம் அந்த மெசேஜ் வரலை. இவனும் விடியவிடிய மெசேஜ் பண்ற பழக்கத்தை விட்டுட்டான்........!

நாங்கள்லாம் அப்பவே இப்படித்தான்.....!

பின்குறிப்பு: அனுபவ பதிவு போட்டாதான் பிரபல பதிவர்னு மண்டபத்துல யாரோ பேசிக்கிட்டாங்க. அதான் இப்படி.........!

நன்றி: கூகிள் இமேஜஸ்

!

Tuesday, August 14, 2012

ஏழாம் அறிவு: ஒரு ஏழரை விமர்சனம்....



படம் வந்து ஒரு வருசம் ஆச்சே, என்ன இவ்ளோ லேட்டா விமர்சனம்னு பார்க்கிறீங்களா? என்ன பண்றது நான் இப்பத்தானே அந்த படத்த பார்த்தேன்...! (இது அந்த பிரபல பதிவருக்கு உள்குத்து அல்ல...!)

சமீபத்துல  7-ம் அறிவு படத்த கட்டாயமா பார்க்க வேண்டிய சூழ்நிலை. படம் வந்த புதுசுல டமிளர், பெருமை அது இதுன்னு சத்தம் அதிகமா இருந்துச்சேன்னு உள்ளுக்குள்ள கொஞ்சம் ஆர்வம் வேற... சரி கழுதைய பாத்து தொலைப்போமேன்னு பார்த்துட்டேன்....  பிரபல பதிவர்கள்லாம் படம் பார்த்தா உடனே தாறுமாறா வெமர்சனம் எழுதனுமாமே, அதான் இப்போ இப்படி ஒரு பதிவு. விமர்சனம்னு நினைக்காம சும்மா படிங்க.



படம் துவக்கத்துல போதி தர்மர் பத்தி சீன்ஸ் கொஞ்ச நேரம் வருது, படத்தை அப்படியே முடிச்சிருக்கலாம். டமிலனின் மிச்சம் மீதி இருக்கும் பெருமையாவது மிஞ்சி இருக்கும். படத்த கண்டினியூ பண்ணி மானம், மருவாதின்னு எதையும் மிச்சம் வெக்காம உருவி விட்டுட்டானுங்க.

ஸ்ருதி ஜெனிடிக் எஞ்சினியரிங் ஸ்டூடண்ட்டாம். ஆராய்ச்சி பண்றாங்களாம். நேரா சூர்யா கிட்ட போய் மேட்டரை எடுத்து சொல்லி கூட்டிட்டு போக வேண்டியதுதானே? அத விட்டுட்டு ஆயிரத்தெட்டு லோலாய் பண்ணிக்கிட்டு இருக்குது. ஆக்சுவலா ஹீரோயின் அண்ட் கோ எல்லாரும் சூர்யாவை வெச்சு ஆராய்ச்சி பண்ற நோக்கத்துல இருக்காங்க. ஆனா சூர்யா தீம்பார்க்ல அவங்களை பார்த்து ஃபாலோ பண்றார்னு கோவப்படுற மாதிரி சீன் வருது. டைரக்டர் சார் என்னதான் சொல்ல வர்ரீங்க?

இதெல்லாம் தேவையா...?

ஒருவழியா சூர்யா லவ் பண்ணி ஃபெய்லியர் ஆகி (க்க்ர்ர்ர் த்தூ......!) எல்லாரும் மேட்டருக்கு வந்து சேர்ராங்க. வில்லன் சீனாவாம். அதுனால நல்லவேள பஞ்ச் டயலாக் இல்ல. அது ஒண்ணுதான்யா படத்துல ஆறுதல். அப்புறம் அது என்னய்யா நோக்கு வர்மம்? ஏதோ மெஸ்மெரிசம், ஹிப்னாடிசம் மாதிரி சமாச்சாரம் போல தெரியுது. அத வெச்சி அடுத்தவனை கண்ட்ரோல் பண்றது கூட ஓகே, பட் அவங்களும் எப்படி வில்லன் மாதிரியே பறந்து பறந்து  சண்ட போடுறாங்க? மனசு சரி, உடம்பு ஒத்துழைக்க வேணாமாய்யா? அவ்ளோ பலம், வலிமை சும்மா எப்படிய்யா வரும்? இதையெல்லாம் காசு கொடுத்து பார்ப்போம்னு டைரக்டருக்கு எவ்வளவு தன்னம்பிக்கை?

ஹீரோயின் ஜெனிடிக் ஆராய்ச்சிய பத்தி சொல்ல ஆரம்பிக்கிறாங்க பாருங்க, முடிலடா சாமி. போதி தர்மருக்கும் சூர்யாவுக்கு  83% ஜீன் மேட்ச் ஆகுதாம். மனுசனுக்கும் சிம்பன்சி குரங்குக்கும் உள்ள ஜீன் ஒற்றுமை 96%, ஒரு மனுசனுக்கும் இன்னொரு மனுசனுக்கும் இடையே உள்ள ஜீன் ஒற்றுமை 99%. முருகதாஸ் இது என்னமோ புளி, மொளகா கணக்கு மாதிரி குத்துமதிப்பா 83% மேட்சிங்னு அடிச்சி விட்டுட்டார் போல. இத வெச்சிக்கிட்டு ஜீன் ஸ்டிமுலேசன் வேற பண்றாங்களாம் அதுவும் 12 நாள்ல...!

போதிதர்மர் எழுதுன பொஸ்தகத்துல உள்ளத படிச்சிட்டு அதை நேரடியா மனுசன் கிட்ட ஆராய்ச்சி பண்ண ப்ளான் பண்றார் ஸ்ருதி. இதையாவது ஒரு பேச்சுக்கு ஒத்துக்கலாம். பட் ஜீன் ஸ்டிமுலேசன்னு சொல்லி பீலா விடுறாரு பாருங்க. சைன்ஸ் ஃபிக்சனாம். அண்ணே முருகதாசண்ணே உங்களுக்கு மனசாட்சியே இல்லியா? ஜீனை தூண்டுறது இருக்கட்டும், ஆனா ஒருத்தர் தன் வாழ்நாள்ல கத்துக்கிற விஷயங்கள்லாம் ஜீனுக்குள்ள எப்படிண்ணே போகும்? கற்பனைக்கும் ஒரு அளவு வேணாம்? அதுவும் இப்படி ஒரு டுபாக்கூர் கற்பனைய போதி தர்மர் மேல தாறுமாறா ஏத்தி விடுறீங்களே இது நியாயமாண்ணே?

அதுக்கப்புறம், டி.என்.ஏ வ அப்படியே மைக்ராஸ்கோப்ல பார்க்கிற மாதிரி காட்டுறாங்களே....  எப்படித்தான் செட்டு போட்டு எடுத்தாங்களோ? அனேகமா படத்தோட 80 கோடி பட்ஜெட்ல பாதி இந்த சீனுக்கே போயிருக்கும். இந்த மாதிரி சைன்ஸ் சமாச்சாரங்கள் பத்தி படம் பண்ணும் போது கொஞ்சம் ஹோம் ஒர்க் பண்ணனும்ணே. டமிலன், பெருமை, வெங்காயம்னு பேசனும்னா இப்படி இஸ்கோல் பசங்க கணக்கா எடுக்கப்படாதுண்ணே....

சீனாக்காரன் ஸ்ருதிய கொல்றதுக்காக வந்தானாம்.வந்த உடனே போய் சத்தமில்லாம அத பண்றத விட்டுப்புட்டு படத்தோட 80 கோடி பட்ஜெட்டுக்கும், வாங்குன காசுக்கும் பாக்குற ஆளுகளைலாம் பறக்க வைக்கிறான், போட்டுத்தள்றான்.

யாருக்குமே தெரியாத லேப்னு சென்னை ஐஐடிக்குள்ள இருக்கற லேபை சொல்றாங்கப்பா.....! சிரிக்க கூட முடியல சார். ஒருவழியா எல்லாம் முடிஞ்சு...... ஹீரோவும் வில்லனும்  நேரடி சண்டைய தொடங்குறாங்க. (தக்காளி என்னத்த கிழிச்சி படம் எடுத்தாலும், கிளைமாக்ஸ்ல ஹீரோவும் வில்லனும் நேருக்கு நேரா கைச்சண்டை போடனும்கற இந்த கருமாந்திரம் புடிச்ச செண்டிமெண்ட்ட மட்டும் விடமாட்டேங்கிறானுங்களே....?).

வில்லன்  துப்பாக்கி, பைப்பு ஊசின்னு என்னென்னமோ ஆயுதங்கள் வெச்சிருந்தான். பட் ஹீரோ கூட கிளைமாக்ஸ் சண்ட போடுறப்போ (வழக்கம் போல) எதையும் காணோம். வில்லன் நோக்கம் என்ன, ஹீரோவ கொல்லுறது, அப்படியே கழுத்த நெரிச்சி கொல்லுவானா.... அதவிட்டுட்டு தொம்மு தொம்முன்னு அடிச்சி தூக்கி போட்டுட்டு வேடிக்கை பார்க்கிறான், பறந்து பறந்து குதிக்கிறான் (பின்ன ஸ்டண்ட் மாஸ்டர்கிட்ட காசு கொடுத்த அளவுக்கு வேலை வாங்க வேணாமா?). எப்படியும் ஹீரோதான் ஜெயிக்க போறாங்கிறதால ஒரு அளவுக்கு மேல சண்டைய பார்த்து ரசிக்க முடியல. சூர்யாவுக்குள்ள திரும்ப போதிதர்மா வர்ரதெல்லாம் என்னது அப்பளம் நமுத்துப்போச்சான்னு கேட்கற மாதிரித்தான் இருக்கு...!

அப்புறம் குறிப்பிட்டே ஆகவேண்டிய ஒரு விஷயம் மியூசிக். யப்பா சாமி ஹாரிசு.... ஆள விடுரா சாமி... எல்கேஜி பசங்க படிக்கிற ரைம்ஸ கூட விட்டு வைக்காம...... ஏன்யா இப்படி? போதிதர்மா சீன் பூரா பேக்ரவுண்டுல ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் பாட்ட கொஞ்சம் டெம்போ குறைச்சு ஸ்லோவா ஹம்மிங் பண்றாங்க...... அண்ணன் காப்பி அடிக்கிறதெல்லாம் அடிச்சி முடிச்சி எல்கேஜி லெவலுக்கு வந்துட்டாரே, இதுவும் முடிஞ்சிட்டா இனி என்ன பண்ணுவாரோ?

போதிதர்மர் நமக்கு பெருமையான விஷயமா இருக்கலாம். ஆனா இந்தப் படம் சத்தியமா இருக்காதுங்க. வேற எதுவும் சொல்றதுக்கில்லீங்கோ.


ங்கொய்யால இனி வில்லு, சுறா மாதிரி மசாலா படங்களை பாத்தாலும் பார்ப்பேனே தவிர இந்த மாதிரி ஒலகப்படங்களை பார்க்க மாட்டேன்யா........!

நன்றி: கூகிள் இமேஜஸ்

Wednesday, July 4, 2012

லவ் பண்ணுங்க சார்.....!





லவ்வர்ஸ் ரெண்டு பேரு அவங்க வழக்கமா மீட் பண்ற எடத்துல சந்திச்சு அன்னிக்கு எங்க போகலாம் என்ன பண்ணலாம்னு பேசிக்கிறாங்க.






பையன்: எங்கேயாவது நல்ல ஹோட்டலா போய் சாப்பிடலமா?

பொண்ணு: உன் இஷ்டம்

பையன்: சரவணபவன்?

பொண்ணு: போன மாசம் அங்கதானே சாப்பிட்டோம்...?

பையன்: அப்போ செட்டிநாடு...?

பொண்ணு: எனக்கு புடிக்கல.. காரமா இருக்கும்

பையன்: ம்ம் கேஎஃப்சி....?

பொண்ணு: நேத்துதான் ஃப்ரெண்ட்ஸ் கூட அங்க சாப்பிட்டேன்..

பையன்: அப்போ வேற எங்க போலாம்னு நீயே சொல்லு

பொண்ணு: உன் இஷ்டம்...
.
.
பையன்: சரி சாப்பாட்ட விடு, வேற எங்கயாவது போலாமா?

பொண்ணு: உன் இஷ்டம்...

பையன்: படத்துக்கு போலாமா....?

பொண்ணு: இப்போ வந்திருக்க எல்லா படமும் பாத்தாச்சு...

பையன்: அப்போ ஏதாச்சும் மாலுக்கு போலாமா?

பொண்ணு: வேணாம்...

பையன்: காஃபி ஷாப்....?

பொண்ணு: நான் டயட்ல இருக்கேன்...

பையன்: அப்போ வேற என்னதான் செய்யறது....?

பொண்ணு: நீயே சொல்லு...
.
.
பையன்: சரி எனக்கு டைமாகுது கெளம்பறேன்....

பொண்ணு: என்னை ஹாஸ்டல்ல போய் விட்டுட்டு போ..

பையன்: ஓ... நான் இன்னிக்கு பைக் எடுத்துட்டு வரல... பஸ்லதான் போகனும்

பொண்ணு: நோ பஸ்ல வேணாம். ட்ரெஸ் அழுக்காகிடும்

பையன்: அப்போ ஆட்டோ..?

பொண்ணு: வேணாம், பக்கத்துலதானே இருக்கு எதுக்கு ஆட்டோ?

பையன்: அப்போ நடந்து போகலாம்..

பொண்ணு: என்னால முடியாது, எனக்கு பசிக்குது....

பையன்: அப்போ சாப்பிட்டே போவோம்?

பொண்ணு: உன் இஷ்டம்...

பையன்:......


இதுக்கு மேல அந்த பையன் நெலமைய யோசிச்சு பார்க்கவே முடியல.... இப்படியெல்லாம் லவ் பண்றதுக்கு பேசாம ஒரு ஆஃப் அடிச்சிட்டு கவுந்து தூங்கலாம்.....!


நன்றி: கூகிள் இமேஜஸ், இந்த மேட்டர் ஈமெயில்ல வந்ததுங்கோ, நான் கொஞ்சம் டிங்கரிங் பண்ணி போட்டிருக்கேன்....ஹி...ஹி.....!