Friday, July 11, 2014

ஜில்லா: ஒரு பின்தங்கிய விமர்சனம்...!ஓப்பனிங் சீன்ல மோகன்லால் வந்து சண்டை போடும் போதே தெரிஞ்சுடுது படம் எப்படின்னு. ஒரு மாசு பத்தாதுன்னு ரெண்டு மாசு காட்டி இருக்காங்க. சின்ன வயசுல அப்பனை கொன்னவனை பாத்து வெறியாகி அவனை பழிவாங்குற கதைதான், என்ன அது கொஞ்சம் வித்தியாசமா இந்த படத்துல வில்லன் சைடுல வருது. ஹீரோ & அல்லக்கைஸ் எல்லாரும் அந்த வில்லன் அப்படி பழிவாங்கிடாம தடுக்கிறாங்க. வழக்கம் போல ஒரு பெரிய தாதா. வழக்கம் போல அவருக்கு ஒரு விசுவாசமான அல்லக்கை. ஒரு சண்டைல உயிரை தியாகம் பண்ணிடுறார். தாதாவும் அந்த அல்லக்கையோட புள்ளைய தன் புள்ளையா நெனச்சு வளர்க்கிறார். அவர் தான் ஹீரோ. அவருக்கு கல்லால குறிபாத்து அடிக்கிற கலை(?) யை சின்ன வயசுல இருந்தே கத்துக் கொடுத்துடுறாங்க. அத வெச்சே அவரு பெரிய ரவுடியா ஃபார்ம் ஆகி தாதா மோகன்லாலோட ஆல் இன் ஆல் ஆக இருக்காரு. 
ரவுடி கும்பல் வந்து ஆஸ்பிட்டல்ல படுத்துக்கிட்டு எல்லாரையும் டார்ச்சர் பண்றானுங்கன்னு போலீஸ்,கீலீஸ்னு எல்லாத்தையும் ட்ரை பண்ணிட்டு கடைசியா மோகன்லால்கிட்ட வந்து கெஞ்சுறாங்க. அவரும் ஃபர்ஸ்ட் 50 பேரை அனுப்பி அடிவாங்கிட்டு, அப்புறம் டாகுடரை அனுப்பி வெக்கிறார். எதிர்பார்த்த மாதிரியே டாகுடர் போய் எல்லாரையும் அடிச்சு தொம்சம் பண்ணி வெரட்டி விடுறார். என்ன ஃபைட்டுல ஆஸ்பிட்டலுக்குதான் சேதாரம் கொஞ்சம் ஜாஸ்தியாகிடுது. சரி விடுங்க அது தயாரிப்பாளர் பிரச்சனை. எப்படியோ ஒரு வழியா ஓப்பனிங் சீன் சடங்க முடிச்சு கதைய(?) ஸ்டார்ட் பண்றாங்க. 
கதைல ஹீரோன்னு இருந்தா ஹீரோயினும் இருக்கனும்,. ஹீரோயின் இருந்தா காதலும் இருக்கனும் இல்லியா? அதுக்காகவே பலமாசம் உக்காந்து யோசிச்சு ஒரு சூப்பர் சீன் வெச்சிருக்காங்க. அதாவது லஞ்சம் வாங்குற பொம்பளை போலீசை ஹீரோயின் காஜல் வந்து கன்னத்துல அறையிறாங்க. பாத்த உடனே ஹீரோவுக்கு காதல் வந்துடுது. சாதா காதல்னா ஹீரோயின் பின்னாடியே போய் ஈவ் டீசிங் பண்ணி ஹீரோயின் மனசை மாத்தி காதலிப்பாங்க. இது தாதா காதலாச்சே, அதான் ஸ்ட்ரைட்டா ஹீரோயின் வீட்டுக்கே போய் பொண்ணு கேக்குறாங்க. ஹீரோயினோட அப்பாவும் பெரிய எடம் வந்திருக்குன்னு பவ்யமா பொண்ணை கூப்புடுறார். பொண்ணு போலீசாம். காக்கி யூனிபார்ம்ல வந்து நிக்குது. நம்ம ஹீரோவுக்குத்தான் காக்கி யூனிபார்ம்னாலே அலர்ஜி ஆச்சே, தெறிச்சு ஓடுறார். அனேகமா காமெடி சீனா ட்ரை பண்ணி இருப்பாங்கன்னு நினைக்கிறேன். நல்லா வந்திருக்கு.
ஹீரோவ போலீசாக்கனும்னு ஆசை டைரக்டருக்கு. அதுக்காகவே செம ட்விஸ்ட்டு ஒண்ணு வெச்சிருக்கார். மதுரைக்கு புது போலீஸ் கமிசனர் வர்ரார். வந்தவர் நேரா மோகன்லால்கிட்ட வந்து அரஸ்ட் பண்ணிக் கூட்டிட்டு போய் தனியா ஆள் இல்லாத ஏரியாவுல வெச்சி ரவுடிய விட போலீஸ்தான் பெருசுனு பஞ்ச் பேசி அங்கேயே ஒத்தையா விட்டுட்டு வந்துடுறார். அத வெச்சி ரவுடிய விட போலீஸ்தான் பெருசுன்னு மோகன்லாலுக்கு புரியுது. கமிசனரை பழிவாங்க என்ன பண்ணலாம்னு யோசிச்சு ஹீரோவை போலீசாக்கிடலாம்னு முடிவு பண்ணிடுறார். நம்ம ஹீரோவும் ஆரம்பத்துல பிகு பண்ணிட்டு அப்புறம் போனா போகுது அப்பா ஆசப்படுறார்னு போலீஸ் ஆகிடுறார். அதுவும் அசிஸ்டண்ட் கமிசனரா அவங்க ஏரியாவுக்கே வர்ரார். 

இப்படியே போனா படத்த எப்படி முடிக்கிறதுன்னு யோசிச்ச டைரக்டர், இன்னொரு ட்விஸ்ட்ட வெச்சிருக்கார். இவ்ளோ நாளும் பண்ணிக்கிட்டு இருந்த அராஜகம் எல்லாம் போலீசாகின உடனே தப்பா தெரிய ஆரம்பிக்குது நம்ம ஹீரோவுக்கு. அவங்க ஆளுகளையே பின்னி பெடலெடுக்கிறார். யூனிபார்ம போட்டுக்கிட்டு மோகன்லாலை பாக்க போறார். கொஞ்ச நேரம் தனியா உக்காந்து பொறுமையா எடுத்து சொல்லி புரிய வைக்க ட்ரை பண்ணலாம். ஆனா இண்டர்வல் சீன் வரனும்றதுக்காக சம்பந்தமே இல்லாம மாறி மாறீ பஞ்ச் டயலாக் பேசுறானுங்க. ஒருவழியா இண்டர்வல்னு போட்டு கொஞ்சம் நிம்மதி கொடுக்கிறானுங்க. 

இண்டர்வல் முடிஞ்சதும், நம்ம வில்லன் ஹீரோ கிட்ட மாட்டிக்கிட்டு எல்லாத்துக்கும் நாந்தான் காரணம்னு வாக்குமூலம் கொடுக்கிறான். சின்ன வயசுல இருந்து 20 வருசமா மோகன்லாலை கொல்ல ட்ரை பண்ணிட்டு இருக்கானாம். அதுவும் மோகன்லாலை வேற எவனும் கொல்லவிடாம இவரே கொல்லனும்னு 20 வருசம் கூடவே இருக்கார்னு ஒரு ஃப்ளாஷ்பேக் காட்டுவாங்க பாருங்க பாத்துட்டு இன்னும் மெய்சிலிர்த்துக்கிட்டு இருக்கேன்....  வழ்க்கம் போல இவர்தான் வில்லன்னு மோகன்லாலுக்கு தெரியாம நம்ம டாகுடரை தப்பா நினைக்க, டாகுடரோ தம்பிய காப்பாத்தனும்னு அரஸ்ட் பண்ணி கூட்டிட்டு போய் ஒளிச்சு வைக்கிறார். வில்லன் ஏன் அவ்ளோ நாள் சும்மா இருந்தான்னு தெரியல. ஒருவழியாக எல்லா சண்டையும் முடிஞ்சு கடைசில சுபம். என்ன தம்பியதான் காவு கொடுத்துறாங்க. தாதா படம்னா ஹீரோ சைடுலயும் ஏதாவது காவு கொடுக்கனும்ல, இல்லேனா லாஜிக்கா (?) இருக்காதுல, அதான்! 
குடும்ப கோஷ்டிகளையும் கவர் பண்ணனும்னு நடுவுல கொஞ்சம் தங்கச்சி செண்ட்டிமெண்ட் வேற வெச்சிருக்காங்க. இவரு பிரிஞ்ச போன உடனே தங்கச்சிக்கு கல்யாணம் நிச்சயமாகி, கல்யாணமும் ஆகுது. ஹீரோ ஆபீஸ்கே வந்து அவரைத்தவிர எல்லாரையும் இன்வைட் பண்றாங்க. ஹீரோ தங்கச்சி எப்படியும் போன்லயாவது கூப்பிடும்னு உருகுறார். கடைசில பாத்தா கல்யாண விருந்துல ஒரு பக்கமா உக்காந்து எதையும் கண்டுக்காம சாப்புட்டு இருக்கார். சாப்புட்டு வந்து ஒரு பஞ்ச் டயலாக் பேசுவார் பாருங்க, தங்கச்சி கல்யாணத்துல அண்ணன் கை நனைக்கனும்னு..... 

அண்ணன்-தங்கச்சி பாசத்துக்கு இப்படி ஒரு சீன் தமிழ் சினிமாவுல சமீபத்துல வந்திருக்காது. அனேகமா பாசமலருக்கு அடுத்த ரேங்க்ல இத வைப்பாங்கன்னு நினைக்கிறேன். படம் பார்க்க வர்ர யூத்துகள் இந்த செண்டிமெண்டால கடுப்பாகிட கூடாதுன்னு டாகுடரு தங்கச்சியா சூப்பர் பிகரை போட்டிருக்காங்க, படத்துல உள்ள ஒரே நல்ல விஷயம் இதுதான். விமர்சனம் எழுதுன யாரும் இதை பத்தி எழுதாம விட்டதை கடுமையா கண்டிக்கிறேன். பின்ன என்னய்யா விமரசனம்னா எல்லாத்தையும் கவர் பண்ணி எழுத வேணாமா? 
நன்றி: கூகிள் இமேஜஸ்...!

11 comments:

காட்டான் said...

எந்த சானல்ல பிறீயா போட்டாங்க? :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பஸ்ல போகும் போது போட்டாங்க........ வேற வழியே இல்ல பாத்துதான் ஆகனும்..... பாத்துட்டா விமர்சனம் எழுதித்தான் ஆகனும்......

செங்கோவி said...

//டாகுடரு தங்கச்சியா சூப்பர் பிகரை போட்டிருக்காங்க, படத்துல உள்ள ஒரே நல்ல விஷயம் இதுதான். //

நான்கூடவா சொல்லலை? இது தப்பாச்சே!

'பரிவை' சே.குமார் said...

ஹா... ஹா... பிரிச்சி மேஞ்சிட்டீங்க...

Jayadev Das said...

இடத்துக்கு தகுந்த ஃ போட்டோ செலக்ஷன் பிரமாதம்...............

ஒன்னும் தெரியாதவன் said...

கிழமையில ஒருதரம் டாக்குத்தர் தம்பிய தற்காலிக சூப்பர் ஸ்டார் ர தொவச்சி தொங்க விடாட்டி பன்னிகுட்டிக்கு தூக்கமே வராது போல

Unknown said...

வணக்கம்,ப.ரா சார்!நலமா?///விமர்சனம்,என்னங்க விமர்சனம்?போட்டிருக்கீங்க பாருங்க ஸ்டில்லு,அப்புடியே டாகுடர் ஆம்புளப்,பொம்பளையாவே மாறிட்டு வர்றாருன்னு சிம்பாலிக்கா சொல்லுது!சூப்பரு!!!

Unknown said...

அடிக்கடி பஸ்ல போங்க பன்னிக்குட்டியாரே....!எங்களுக்கு நெறய ஒலகப்பட விமர்சனம் கெடைக்கும்.

Unknown said...

அப்படியே "வீரம்" விமர்ஜனமும் கையோடு போட்ருங்கனா...........

Unknown said...

Intha padamavathu thevalaam, ithu kooda, veeramnu our padam vanthuthu,antha padathuku kadhaiye ennanu Innum, enga thedipathum kedaikala,
Enga antha padathoda oneliner aavathu, korvaya solunga parpom

MANO நாஞ்சில் மனோ said...

செல வப்பாவ, நாம அது பக்கத்துல போயி குத்த வச்சி உக்காருவோம்.