Thursday, February 23, 2012

துப்பாக்கி (எ) டுப்பாக்கி: ஒரு உன்னத அனுபவம்
பதிவர்களுக்காக பழைய டாகுடர் படங்களைத் தீவிர ஆய்வு செய்து டாகுடரின் புதுப்பட விமர்சனங்களை நாம் முன்கூட்டியே தருவது பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். அந்த வகையில் இப்போது உங்களுக்காக டுப்பாக்கி. 

இப்படம் நிறுத்தப்பட்டதாக திடீரென்று தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. என்ன நடந்ததென்று டைரக்டருக்கும் டாகுடருக்கும் மட்டுமே தெரியும்.  இருந்தாலும் ரசிகப் பெருமக்களுக்கு ஏற்பட்ட அந்த அதிர்ச்சியை போக்கவும், ஒருவேளை படம் தடைபட்டாலும் ரசிகர்கள் ஏமாந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தினாலும் இந்த விமர்சனத்தை உடனடியாக வெளியிடுகிறோம். பரபரப்பான இக்கதையை சஸ்பென்சாக திரையரங்கில் சென்று கண்டுகளிக்க விரும்புபவர்கள் உடனே ப்ளாக்கை விட்டு அப்பீட் ஆகிக் கொள்ளவும்.

ஓப்பனிங் சீன். அது ஒரு அழகான கிராமம். திருவிழா நேரம். முக்கியமான நிகழ்வாக பன் சாப்பிடும் போட்டி ஆரம்பிக்க இருக்கிறது. டாகுடரின் தங்கை, நண்பர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். நேரம் கடந்து கொண்டிருக்கிறது. பஞ்சாயத்து பெருசுகள் பொறுமையிழக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரு பெருசு என்னய்யா டைம் ஆகிட்டே இருக்கு, இன்னுமா பூமி வர்ராரு? சீக்கிரம் ஆரம்பிங்கய்யா என்று அங்கலாய்க்கிறது. எல்லோரும் பரபரப்புடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். படத்தை பார்க்கும் நமக்கும் படபடப்பாக இருக்கிறது. வழக்கமான டாகுடர் படங்கள் போல் இல்லாமல் மிகவும் பரபரப்பாகவும் வித்தியாசமாகவும் இந்த ஓப்பனிங் காட்சியை எடுத்ததற்கு இயக்குனருக்குப் பாராட்டுக்கள். ஹேட்ஸ் ஆஃப்...!

அப்போது திடீரென புலி உறுமும் சத்தம் கேட்கிறது. எல்லாரும் பதறிப்போய் திரும்பி பார்க்கிறார்கள். நமக்கும் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. பயங்கரமான உறுமலுடன் ஒண்டிப் புலி கெட்டப்பில் டாகுடர் எங்கிருந்தோ பறந்து வந்து நடுவில் குதித்து, அப்படியே சைடில் திரும்பி கேமராவை பார்த்து புன்னகைக்கிறார். உடனே தடதடவென ஓப்பனிங் சாங் ஆரம்பிக்கிறது. பாடல் முடியும் வரை நம்மால் சீட்டில் உக்காரவே முடியவில்லை. அட, நாமும் நம்மையறியாமல் டான்ஸ் ஆடி விடுகிறோம் என்று சொல்கிறேன். 

பாடல் முடிந்ததும் வழக்கம் போல் இல்லாமல் மிக வித்தியாசமாக டாகுடர்  வெட்டி நண்பர்களுடன் சேர்ந்து கிராமத்து குறும்புச் சேட்டைகளில் ஈடுபடுவது, தங்கையுடன் செல்லமாக சண்டை போடுவது என்று காட்சிகள் வைத்தது நல்ல ஐடியா. குறிப்பாக தங்கையுடன் வரும் பாச காட்சிகளில் டாகுடரின் நடிப்பில் புதிய பரிமாணம் மின்னுகிறது. தங்கை சாப்பிடாமல் இருக்கும் போது தானும் சாப்பிடாமல் இருப்பது ஹைலைட்.

தங்கை பாசமுடன் வாங்கிக் கேட்ட ரிப்பனை காசு கொடுத்து வாங்க முடியாமல் திருடிக் கொண்டு வருவதும், மாட்டிக் கொண்டு அடிவாங்குவதும் அற்புதம். அந்தக் காட்சியில் தியேட்டரில் விசில் பறக்கிறது. அதிலும் அடிவாங்கியதைப் பற்றிக் கவலைப்படாமல், அந்த ரிப்பனை தங்கச்சிக்கு கொடுக்க முடியவில்லையே என்று அவர் அழுவது பிரமாதமான நடிப்பு. ஒரு ஆக்சன் ஹீரோ செண்டிமெண்ட் காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்று பாடமே நடத்தி இருக்கிறார் டாகுடர். எழுதி வைத்துக் கொள்ளுங்கள், இந்த வருடம் சிறந்த நடிகருக்கான அனைத்து விருதுகளையும் அள்ளப் போவது டாகுடர் தான். பாராட்டுக்கள்.  

இப்படி பாசமாக இருந்த தங்கை டவுனில் இருந்து வந்த ஒருவனை விரும்புகிறாள். டாகுடருக்கு இது தெரிய வந்ததும், தங்கச்சிக்கு தெரியாமல் அவனை பின்தொடர்ந்து அவன் ஒரு தீவிரவாதி என்று கண்டுபிடிக்கிறார். குளத்தங்கரை, சந்தை, தென்னந்தோப்பு, பஸ் ஸ்டாப்பு என்று மிக ஆபத்தான இடங்களில் ஒளிந்திருந்து வில்லனைப் பற்றி கண்டுபிடிக்கும் காட்சிகளை மிக மிகத் திரில்லிங்காக படமாக்கி இருக்கிறார்கள். டாகுடரும் அதிகபட்ச ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார். அந்தக் காட்சியை படமாக்கிய விதமும், கேமரா கோணங்களும் தமிழ் சினிமாவுக்கே புதுசு. வழக்கமாக டாகுடர் படங்களில் வருவது போல இல்லாமல் தனியாகவே சென்று வில்லனுக்கு பின்னால் பெரிய கும்பல் இருப்பதையும், அவர்கள் சென்னையில் ஒரு பெரிய பேங்கை கொள்ளையடிக்க சதித் திட்டம் தீட்டுவதையும் கண்டுபிடிப்பது, அதை போலீசிடம் சொல்வது என்று டாகுடர் கலக்கியெடுத்திருக்கிறார். இப்படம் டாகுடர் ரசிகர்களுக்கு மட்டுமில்லை, அனைவருக்குமே கொண்டாட்டம் தான். 
போலீஸ் வழக்கம் போல் மெத்தனமாக இருந்து விடுகிறது. அந்த ஸ்டேசனில் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி இருக்கிறார். அவர் டாகுடரை தனியாக தாய்லாந்தில் இருக்கும் ஒரு பாரில் சந்திக்கிறார். வில்லனிடம் இருக்கும் அரசியல் பேக்ரவுண்ட் பற்றி சொல்லி போலீசால் வில்லனையும் அவன் கும்பலையும் எதுவும் முடியாது என்பதையும் தெளிவாக எடுத்துச் சொல்கிறார். வில்லனை ஒழித்துக் கட்டும் வேலையை டாகுடர் தான் செய்ய முடியும் என்று அந்த போலீஸ் ஆபீசர் கெஞ்சுகிறார். கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு டாகுடரும் சம்மதிக்கிறார். போலீஸ் ஆபீசர் தன்னிடம் உள்ள ஸ்பெசல் ராசி டுப்பாக்கியை எடுத்து டாகுடரிடம் கொடுத்து சென்னை சென்று எல்லாவற்றையும் முடித்து விட்டு வருமாறு அனுப்பி வைக்கிறார். போலீஸ் வரும் காட்சிகள் அனைத்தும் யதார்த்தமாக தத்ரூபமாக அமைந்திருப்பது படத்திற்கு கை கொடுக்கிறது. 

நேர்மையான போலீஸ் அதிகாரியாக வரும் நடிகர் நடிப்பில் பின்னியெடுத்திருக்கிறார். இவர் இனி தமிழ் சினிமாவில் போலீசாக ஒரு ரவுண்டு வருவார் எனலாம். அந்த பார் சீன் முழுவதும் கழுதை கத்துவது போன்று வரும் பின்னணி இசையில் இசையமைப்பாளரின் உழைப்பு தெரிகிறது. நல்ல ஒலிசேர்ப்பு. 

இடைவேளைக்குப் பின்னர் டாகுடர் சென்னைக்குச் சென்று தீவிரவாத கும்பலின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கிறார். அதற்கான காட்சிகளின் நீளத்தை இயக்குனர் சற்றுக் குறைத்திருக்கலாம். சென்னைக்கு வந்து முதல் நாளே டாகுடர் வில்லனை பின்பற்றிச் சென்று உடனே அவர்களின் இடத்தை தெரிந்து கொள்கிறார். ஆனால் பின் ஏன் எதுவும் செய்யாமல் சவால் விட்டுவிட்டு திரும்பி விடுகிறார் என்றுதான் புரியவில்லை. பின்னர் வரும் காட்சிகளில் டாகுடரும் வில்லன் ஆட்களும் சந்தித்துக் கொள்ளும் இடங்கள் எல்லாம் தீப்பொறி பறக்கிறது. ஆனால் சண்டையைத் தொடங்காமல் ஏய்ய் ஏய்ய் என்று சிறிது நேரம் மாறி மாறி கத்திவிட்டு சென்றுவிடுவது பரபரப்பின் உச்சகட்டம். அனைத்துமே பார்ப்பதற்கு திகிலாக மிகவும் அருமையாக வந்திருக்கிறது. 

டாகுடர் போலீஸ் ஆபீசர் கொடுத்த அந்த ஸ்பெசல் டுப்பாக்கியை அடிக்கடி எடுத்துப் பார்த்துவிட்டு வைத்துக் கொள்ளும் காட்சி ஏ ஒன் ரகம். நடுவே  டெல்லியில் இருந்து வரும் ஒரு உளவுத்துறை அதிகாரி டாகுடரை வந்து பார்த்து சென்னையை தீவிரவாதிகளிடம் இருந்து டாகுடர்தான் காப்பாற்ற வேண்டும் உருக்கமாக வேண்டுகோள் வைக்கிறார். இந்த இடத்தில் இயக்குனர் கொஞ்சம் சொதப்பி இருக்கிறார். பரபரப்பான காட்சியாக வந்திருக்க வேண்டியது, செண்டிமெண்ட் காட்சியாகிவிட்டது, ஆனால் டாகுடரின் நடிப்பில் அதுவும் பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது. 

ஹீரோயின் சைடு வில்லனின் தங்கையாக வருகிறார். சென்னையில் ஒரு அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார். டிக்கட்டே எடுக்காமல் பஸ்சில் சென்று வரும் அவரை டாகுடர் எதேச்சையாக டிக்கட் செக்கிங்கில் இருந்து காப்பாற்றுகிறார். டிக்கட் செக்கர்களுக்கும் அவருக்கும் நடக்கும் சேசிங் விறு விறு ரகம். பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் சீட் நுனிக்கே வந்துவிடுகிறார்கள். அங்கிருந்து உடனடியாக ஹீரோவும் ஹீரோயினும் டூயட்டுக்கு சென்றுவிடுவது நம்மை கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட வைக்கிறது.

அதன்பிறகு டாகுடர் எவ்வாறு வில்லன்களை ஒழித்துக்கட்டி சென்னையை காப்பாற்றுகிறார் என்பதையெல்லாம் வெண் திரையில் காண்க. படம் எப்படியும் 2012-ல் வந்துவிடும். உங்கள் ஊரில் உள்ள ஏதாவது நல்ல தியேட்டரில் சொந்தக்காசில் டிக்கட் எடுத்துப் பார்க்கவும். 

படத்தில் லாஜிக் மிஸ்டேக் என்று சொல்ல வேண்டும் என்றால் டாகுடரின் தங்கைக்கும் வில்லனுக்குமான காதல் என்னாகிறது என்று கடைசிவரை காட்டாததுதான். கிளைமாக்சிலாவது டாகுடர் வில்லனை பேசி திருத்தி தங்கச்சியுடன் சேர்த்து வைப்பது போல் காட்சி வைத்திருக்கலாம். வில்லன் கும்பல் நவீனரக மெசின் கன்கள் வைத்திருந்தும், அதை கடைசிவரை அவர்கள் பயன்படுத்தாதது ஏன் என்று தெரியவில்லை. ஆனால் டாகுடரிடம் இருக்கும் அந்த டுப்பாக்கியைப் பார்த்து அனைவருமே பயப்படுவது போன்று வைத்திருப்பதற்கு இயக்குனருக்கு ஒரு ஸ்பெசல் பாராட்டு. அதே போல் இடைவேளைக்குப் பிறகு ஹீரோ கழுத்தில் ஒரு கேமராவை தொங்க விட்டபடியே வருவது இயக்குனரின் தனித்தன்மையைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
டுப்பாக்கி என்று பெயர் வைத்திருப்பதாலோ என்னவோ படம் நெடுக ஒரு டுப்பாக்கியை காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் கடைசிவரை அது பயன்படுத்தப்படவே இல்லை. இயக்குனர் டுப்பாக்கியை பின்நவீனத்துவ குறியீடாக பயன்படுத்தி அதன் மூலம் ரசிகர்களுக்கு எதையோ உணர்த்த முயன்றிருக்கிறார். நல்ல முயற்சி. இப்படியான முயற்சிகள் தமிழ்சினிமாவில் வருவதை அனைவரும் வரவேற்க வேண்டும்.

பாடல்கள் அனைத்துமே நன்றாக வந்திருக்கின்றன. டாகுடர் ரசிகர்கள் அனைவருக்குமே பிடிக்கும். அந்த ஓப்பனிங் சாங்தான் இன்னும் ஒரு வருடத்திற்கு தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கப் போகிறது. படம் நெடுக வரும் டாகுடரின் பஞ்ச் வசனங்கள் நெஞ்சில் இடியாய் இறங்குகிறது.  வசனகர்த்தா தன் பொறுப்பை உணர்ந்து எழுதி இருக்கிறார். டாகுடர் இந்தப் படத்திலும் வாயில் கோலிக்குண்டை உருட்டியபடியே வருவது உலகத்தரம்.

சண்டைக் காட்சிகளில் ஒளிப்பதிவும், இசையும், டாகுடரும் மாறி மாறி போட்டி போட்டுக் கொண்டு கலக்குகிறார்கள். படம் பார்க்கும் நாமும் நிஜமாவே கலங்கித்தான் போகிறோம். படம் முடிவதற்குள் மூன்று, நான்கு முறை வயிற்றையும் கலக்கி விடுகிறது. மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இப்படம் வரப்பிரசாதம். சுலபமாக தினமும் ரெண்டு ஷோ பார்த்து விடலாம். ஏற்கனவே நிற்காமல் போய்க் கொண்டிருப்பவர்கள் செலவு பார்க்காமல் நல்ல டயாப்பர் ஒன்றை வாங்கி அணிந்து கொண்டு தியேட்டருக்குச் செல்வது உத்தமம்.

மொத்தத்தில் டுப்பாக்கி தமிழில் வந்திருக்கும் ஒரு உலகப்படம். அனைவரும்  தவறாமல் பார்த்து தமிழ்சினிமாவை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லுங்கள்.

நன்றி: கூகிள் இமேஜஸ், சினி சவுத்

145 comments:

மாலுமி said...

வணக்கம்.........

மாலுமி said...

/// இப்போது உங்களுக்காக டுப்பாக்கி. ///
இந்த டுப்பாக்கில குண்டு இதுக்குதா ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது வணக்கமா என்ன தலைப்புச் செய்தி சொல்லப் போறியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மாலுமி said...
/// இப்போது உங்களுக்காக டுப்பாக்கி. ///
இந்த டுப்பாக்கில குண்டு இதுக்குதா ?////

படிச்சிப்பாரு தெரியும்......

மாலுமி said...

/// தங்கை சாப்பிடாமல் இருக்கும் போது தானும் சாப்பிடாமல் இருப்பது ஹைலைட்.. ///
என்ன சரக்கு மச்சி ???

Sen22 said...

விஜய் படத்துக்கே உரிய அனைத்து அம்சங்களும் கூடிய திரை விமர்சனம்.... கலக்கல் சார் .. :)))))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// மாலுமி said...
/// தங்கை சாப்பிடாமல் இருக்கும் போது தானும் சாப்பிடாமல் இருப்பது ஹைலைட்.. ///
என்ன சரக்கு மச்சி ???////

சுடு ச்சீ சுண்டக்கஞ்சியா இருக்கும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// Sen22 said...
விஜய் படத்துக்கே உரிய அனைத்து அம்சங்களும் கூடிய திரை விமர்சனம்.... கலக்கல் சார் .. :)))))////

ஹஹஹா எல்லாமே எல்லா டாகுடர் படத்துலயும் இருக்கறதுதானே..

தமிழ்வாசி பிரகாஷ் said...

டுப்பாக்கி குண்டு தீந்து போன என்ன செய்றது அண்ணே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////தமிழ்வாசி பிரகாஷ் said...
டுப்பாக்கி குண்டு தீந்து போன என்ன செய்றது அண்ணே...//////

பீரங்கிய யூஸ் பண்ணனும்....

தமிழ்வாசி பிரகாஷ் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////தமிழ்வாசி பிரகாஷ் said...
டுப்பாக்கி குண்டு தீந்து போன என்ன செய்றது அண்ணே...//////

பீரங்கிய யூஸ் பண்ணனும்....///

அப்போ, படம் பேரும் பீரங்கி, ராக்கெட் குண்டுன்னு அடிக்கடி தீந்து போயி பேரு மாறிட்டே இருக்குமா?

மாலுமி said...

/// படம் முடிவதற்குள் மூன்று, நான்கு முறை வயிற்றையும் கலக்கி விடுகிறது. மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இப்படம் வரப்பிரசாதம். சுலபமாக தினமும் ரெண்டு ஷோ பார்த்து விடலாம் ///
முத்தின மூலம் இருக்குறவங்க.......இந்த படத்த பாத்தா சரி ஆகிடுமா ?

Sen22 said...

அந்த பண் சாப்பிடற போட்டியில டாக்டர் ஜெயிச்சரா இல்லையான்னு சொல்லவே இல்ல சார் நீங்க... :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// தமிழ்வாசி பிரகாஷ் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////தமிழ்வாசி பிரகாஷ் said...
டுப்பாக்கி குண்டு தீந்து போன என்ன செய்றது அண்ணே...//////

பீரங்கிய யூஸ் பண்ணனும்....///

அப்போ, படம் பேரும் பீரங்கி, ராக்கெட் குண்டுன்னு அடிக்கடி தீந்து போயி பேரு மாறிட்டே இருக்குமா?///////

இல்ல ஏன்னா டாகுடரோட துப்பாக்கில குண்டு முடியவே முடியாது....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மாலுமி said...
/// படம் முடிவதற்குள் மூன்று, நான்கு முறை வயிற்றையும் கலக்கி விடுகிறது. மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இப்படம் வரப்பிரசாதம். சுலபமாக தினமும் ரெண்டு ஷோ பார்த்து விடலாம் ///
முத்தின மூலம் இருக்குறவங்க.......இந்த படத்த பாத்தா சரி ஆகிடுமா ?//////


உள்மூலம், வெளிமூலம், முத்தின மூலம் எல்லாம் சரியாகிடும்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// Sen22 said...
அந்த பண் சாப்பிடற போட்டியில டாக்டர் ஜெயிச்சரா இல்லையான்னு சொல்லவே இல்ல சார் நீங்க... :))////

அந்தப் போட்டி நடக்குறதே அவர் தலைமைலதானே?

Sen22 said...

//டுப்பாக்கி என்று பெயர் வைத்திருப்பதாலோ என்னவோ படம் நெடுக ஒரு டுப்பாக்கியை காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் கடைசிவரை அது பயன்படுத்தப்படவே இல்லை.//

அப்ப வெத்து துப்பாக்கி-னு பேர் வச்சிருக்கலாம்.... :)))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Sen22 said...
//டுப்பாக்கி என்று பெயர் வைத்திருப்பதாலோ என்னவோ படம் நெடுக ஒரு டுப்பாக்கியை காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் கடைசிவரை அது பயன்படுத்தப்படவே இல்லை.//

அப்ப வெத்து துப்பாக்கி-னு பேர் வச்சிருக்கலாம்.... :)))/////

சேச்சே அந்த துப்பாக்கி உள்ள குண்டு வெச்சிருந்தாங்களாம்....

NAAI-NAKKS said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சப்பா......
முடியலை...இதுக்கு பேசாம படத்தையே
பார்த்துடலாம் போல....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////NAAI-NAKKS said...
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சப்பா......
முடியலை...இதுக்கு பேசாம படத்தையே
பார்த்துடலாம் போல....
/////

அப்படி படம் பார்க்க தேவையான துணிச்சலையும் தைரியத்தையும் ஏற்படுத்தத்தான் இந்த பதிவு.....

NAAI-NAKKS said...

/////NAAI-NAKKS said...
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சப்பா......
முடியலை...இதுக்கு பேசாம படத்தையே
பார்த்துடலாம் போல....
/////

அப்படி படம் பார்க்க தேவையான துணிச்சலையும் தைரியத்தையும் ஏற்படுத்தத்தான் இந்த பதிவு.....///////

எங்க...இங்கேயே வேலைய முடிச்சி அனுப்பியாச்சி....அப்புறம் எங்க...போறது...படத்துக்கு...ஸ்டேயிட்டா ...அங்கதான்...

NAAI-NAKKS said...

உடான்ஸ்,,,தம,,எல்லாத்திலையும்...வோட் போட்டாச்சி...
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......

ஹிஹி...போஸ்ட் படிச்சதோட விளைவு....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////NAAI-NAKKS said...
/////NAAI-NAKKS said...
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சப்பா......
முடியலை...இதுக்கு பேசாம படத்தையே
பார்த்துடலாம் போல....
/////

அப்படி படம் பார்க்க தேவையான துணிச்சலையும் தைரியத்தையும் ஏற்படுத்தத்தான் இந்த பதிவு.....///////

எங்க...இங்கேயே வேலைய முடிச்சி அனுப்பியாச்சி....அப்புறம் எங்க...போறது...படத்துக்கு...ஸ்டேயிட்டா ...அங்கதான்...///////

யோவ் உங்களுக்காக டாகுடரோட படங்களை எப்படியெல்லாம் ஆராய்ச்சி பண்ணி விமர்சனம் பண்ணி இருக்கேன்..... இப்படி சொன்னா எப்படி?

NAAI-NAKKS said...

இந்த போஸ்ட் படிச்ச நக்ஸ்-ஏ இப்படி இருக்கானே....இதை எழுதினவன் இப்ப
இருப்பான்-ங்குற????????????????????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////NAAI-NAKKS said...
உடான்ஸ்,,,தம,,எல்லாத்திலையும்...வோட் போட்டாச்சி...
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......

ஹிஹி...போஸ்ட் படிச்சதோட விளைவு....//////

எத்தன பவர்ஸ்டார் வந்தாலும் டாகுடர் பவரே தனிதான்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// NAAI-NAKKS said...
இந்த போஸ்ட் படிச்ச நக்ஸ்-ஏ இப்படி இருக்கானே....இதை எழுதினவன் இப்ப
இருப்பான்-ங்குற????????????????????//////

போஸ்ட் எழுதுவன் ஒரே கல்ப்ல பத்து பாட்டல் பாலிடால் குடிச்ச எஃபக்ட்ல இருப்பான்.......

நல்ல நேரம் சதீஷ்குமார் said...

குண்டு போட்ட துப்பாக்கியா.....

நல்ல நேரம் சதீஷ்குமார் said...

மொத்தத்துல டாக்டர் படம் பார்ப்பவர்களையெல்லாம் சுட்டு சுட்டு பொசுக்கியிருக்கிறார் ன்னு சொல்லுங்க!!!

NAAI-NAKKS said...

எங்க...இங்கேயே வேலைய முடிச்சி அனுப்பியாச்சி....அப்புறம் எங்க...போறது...படத்துக்கு...ஸ்டேயிட்டா ...அங்கதான்...///////

யோவ் உங்களுக்காக டாகுடரோட படங்களை எப்படியெல்லாம் ஆராய்ச்சி பண்ணி விமர்சனம் பண்ணி இருக்கேன்..... இப்படி சொன்னா எப்படி?///////


ஆமா ஆமா....ரோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பெரிய ஆராய்ச்சி...
அவங்க அப்பன் இன்ட்ரோடுஸ் பண்ணதுல இருந்து இப்படிதான் நடிக்குறான்....

ஆராய்ச்சி தேவையா...????

அது எப்படியா...விஜய்,,விஜைஜகாந்த்,,படத்துக்கு மட்டும் வில்லனுங்க...ஒரே மாதிரி வராணுக...????

பேர் ராசியா?????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// நல்ல நேரம் சதீஷ்குமார் said...
குண்டு போட்ட துப்பாக்கியா.....//////

அது மத்த துப்பாக்கி, டாகுடர் துப்பாக்கின்னா குண்டே தேவையில்ல....

நல்ல நேரம் சதீஷ்குமார் said...

டாக்டர் சார்..இந்த பன்னிக்குட்டியை வாய்லியே சுடுங்க.சார்.ரொம்பத்தான் உங்கள நக்கல் விடுறாரு!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நல்ல நேரம் சதீஷ்குமார் said...
மொத்தத்துல டாக்டர் படம் பார்ப்பவர்களையெல்லாம் சுட்டு சுட்டு பொசுக்கியிருக்கிறார் ன்னு சொல்லுங்க!!!////////

படம் பார்த்தவங்களை மட்டுமா..... எல்லாரையும்தான்....!

நல்ல நேரம் சதீஷ்குமார் said...

அட்ட்ட்டா...குண்டு போடுறவன்..துப்பாக்கி வெச்சிருக்கிறவன் தொல்லை தாங்கமுடியலப்பா எங்க பார்த்தாலும் துப்பாக்கின்றானுக..என்கவுண்டர்கிறானுக..ஒரே குஷ்டமம்பா..ச்சீ..கஷ்டமப்பா!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////NAAI-NAKKS said...
எங்க...இங்கேயே வேலைய முடிச்சி அனுப்பியாச்சி....அப்புறம் எங்க...போறது...படத்துக்கு...ஸ்டேயிட்டா ...அங்கதான்...///////

யோவ் உங்களுக்காக டாகுடரோட படங்களை எப்படியெல்லாம் ஆராய்ச்சி பண்ணி விமர்சனம் பண்ணி இருக்கேன்..... இப்படி சொன்னா எப்படி?///////


ஆமா ஆமா....ரோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பெரிய ஆராய்ச்சி...
அவங்க அப்பன் இன்ட்ரோடுஸ் பண்ணதுல இருந்து இப்படிதான் நடிக்குறான்....

ஆராய்ச்சி தேவையா...????

அது எப்படியா...விஜய்,,விஜைஜகாந்த்,,படத்துக்கு மட்டும் வில்லனுங்க...ஒரே மாதிரி வராணுக...????

பேர் ராசியா?????////////

அங்கதான் நிக்கிறாங்க நம்ம டாகுடர்ஸ்..........

NAAI-NAKKS said...

படத்தில் லாஜிக் மிஸ்டேக் என்று சொல்ல வேண்டும் என்றால் டாகுடரின் தங்கைக்கும் வில்லனுக்குமான காதல் என்னாகிறது என்று கடைசிவரை காட்டாததுதான்./////

படமே மிஸ் டேக் ....
இதுல லாஜிக் பாக்குறாரு....
நீங்க..என்ன அவரா?????

NAAI-NAKKS said...

படத்தில் லாஜிக் மிஸ்டேக் என்று சொல்ல வேண்டும் என்றால் டாகுடரின் தங்கைக்கும் வில்லனுக்குமான காதல் என்னாகிறது என்று கடைசிவரை காட்டாததுதான்.///////

மிஸ்டேக் s.a.c&அவர் wife-கிட்ட இருக்கு....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நல்ல நேரம் சதீஷ்குமார் said...
டாக்டர் சார்..இந்த பன்னிக்குட்டியை வாய்லியே சுடுங்க.சார்.ரொம்பத்தான் உங்கள நக்கல் விடுறாரு!!///////

நாங்க பவர்ஸ்டார்கிட்ட சொல்லி கொடுத்துடுவோமே....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நல்ல நேரம் சதீஷ்குமார் said...
அட்ட்ட்டா...குண்டு போடுறவன்..துப்பாக்கி வெச்சிருக்கிறவன் தொல்லை தாங்கமுடியலப்பா எங்க பார்த்தாலும் துப்பாக்கின்றானுக..என்கவுண்டர்கிறானுக..ஒரே குஷ்டமம்பா..ச்சீ..கஷ்டமப்பா!!////////

இந்த டாகுடர்னு பட்டம் வாங்குனவனுங்க பண்ற தொல்லை இருக்கே.........

NAAI-NAKKS said...

மொத்தத்தில் டுப்பாக்கி தமிழில் வந்திருக்கும் ஒரு உலகப்படம். அனைவரும் தவறாமல் பார்த்து தமிழ்சினிமாவை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லுங்கள்.////

இந்த ஆடு புலி ஆட்ட---கட்டத்துக்கா...?????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// NAAI-NAKKS said...
படத்தில் லாஜிக் மிஸ்டேக் என்று சொல்ல வேண்டும் என்றால் டாகுடரின் தங்கைக்கும் வில்லனுக்குமான காதல் என்னாகிறது என்று கடைசிவரை காட்டாததுதான்./////

படமே மிஸ் டேக் ....
இதுல லாஜிக் பாக்குறாரு....
நீங்க..என்ன அவரா?????////////

எதுவா இருந்தாலும் நாங்க விமர்சனம்னு வந்துட்டா தொழில் சுத்தமா பண்ணிடுவோம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// NAAI-NAKKS said...
படத்தில் லாஜிக் மிஸ்டேக் என்று சொல்ல வேண்டும் என்றால் டாகுடரின் தங்கைக்கும் வில்லனுக்குமான காதல் என்னாகிறது என்று கடைசிவரை காட்டாததுதான்.///////

மிஸ்டேக் s.a.c&அவர் wife-கிட்ட இருக்கு..../////

டோட்டல் டேமேஜ்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// NAAI-NAKKS said...
மொத்தத்தில் டுப்பாக்கி தமிழில் வந்திருக்கும் ஒரு உலகப்படம். அனைவரும் தவறாமல் பார்த்து தமிழ்சினிமாவை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லுங்கள்.////

இந்த ஆடு புலி ஆட்ட---கட்டத்துக்கா...?????////////

அடுத்த மொதலமைச்சரை இப்படி குறிப்பிடுவதை கண்டிக்கிறேன்!

NAAI-NAKKS said...

இப்படம் நிறுத்தப்பட்டதாக திடீரென்று தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது////

நோ..நோ..நோஓஓஓஓஒ..
அதிர்ச்சி....ஒன்லி...ஹாப்பி...

ராஜகோபால் said...

டாகுடரு பாவம்யா அந்த பச்ச புள்ளையே இப்பதான் துக்கத்துல இருந்து துப்பாக்கி மாதிரி எளுந்துருச்சிருக்கு விடுயா பாவம்

ராஜகோபால் said...
This comment has been removed by the author.
சி.பி.செந்தில்குமார் said...

i have a doubt, if all of us post against doctor vijay , minimum 20 people gumming and blamming by bad words, by ph or in blog.. but no body kandu konding u YYYYYYYYY? hi hi hi

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////NAAI-NAKKS said...
இப்படம் நிறுத்தப்பட்டதாக திடீரென்று தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது////

நோ..நோ..நோஓஓஓஓஒ..
அதிர்ச்சி....ஒன்லி...ஹாப்பி.../////

அப்படியெல்லாம் எஸ்கேப் ஆகிட கூடாதுன்னுதானே இந்த வெமர்சனமே....?

NAAI-NAKKS said...

அது ஒரு அழகான கிராமம். திருவிழா நேரம். முக்கியமான நிகழ்வாக பன் சாப்பிடும் போட்டி ஆரம்பிக்க இருக்கிறது.///

அந்த பன் அவர் பிறந்த பொது வாங்குனதுதானே...??????????
ஏன் கேக்குரான்னா...கதையும் அதே தான்...

ராஜகோபால் said...

டாகுடரு பாவம்யா அந்த பச்ச புள்ளையே இப்பதான் துக்கத்துல இருந்து துப்பாக்கி மாதிரி எளுந்துருச்சிருக்கு விடுயா பாவம்

NAAI-NAKKS said...

i have a doubt, if all of us post against doctor vijay , minimum 20 people gumming and blamming by bad words, by ph or in blog.. but no body kandu konding u YYYYYYYYY? hi hi hi/////
யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ் போஸ்ட் படிச்சியா??????

ராஜகோபால் said...

டாகுடரு பாவம்யா அந்த பச்ச புள்ளையே இப்பதான் துக்கத்துல இருந்து துப்பாக்கி மாதிரி எளுந்துருச்சிருக்கு விடுயா பாவம்

NAAI-NAKKS said...

சி.பி.செந்தில்குமார் said...
i have a doubt, if all of us post against doctor vijay , minimum 20 people gumming and blamming by bad words, by ph or in blog.. but no body kandu konding u YYYYYYYYY? hi hi hi///////

இதுவும் பொறுக்கலையா??

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ராஜகோபால் said...
டாகுடரு பாவம்யா அந்த பச்ச புள்ளையே இப்பதான் துக்கத்துல இருந்து துப்பாக்கி மாதிரி எளுந்துருச்சிருக்கு விடுயா பாவம்/////

யோவ் நல்லா பாருய்யா, டாகுடருக்கு வெளம்பரம்தான்யா பண்ணி இருக்கேன்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// சி.பி.செந்தில்குமார் said...
i have a doubt, if all of us post against doctor vijay , minimum 20 people gumming and blamming by bad words, by ph or in blog.. but no body kandu konding u YYYYYYYYY? hi hi hi//////

அண்ணே அதுக்காக ஆள் செட் பண்ணி அனுப்பி வெச்சிடாதீங்கண்ணே....

NAAI-NAKKS said...

சி.பி.செந்தில்குமார் said...
i have a doubt, if all of us post against doctor vijay , minimum 20 people gumming and blamming by bad words, by ph or in blog.. but no body kandu konding u YYYYYYYYY? hi hi hi//////

நீங்க தான் வறுத்தபடாத வாலிபர் சங்க தலைவராசே....
ஒய் வருத பட்டிங் ?????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// NAAI-NAKKS said...
i have a doubt, if all of us post against doctor vijay , minimum 20 people gumming and blamming by bad words, by ph or in blog.. but no body kandu konding u YYYYYYYYY? hi hi hi/////
யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ் போஸ்ட் படிச்சியா??????///////

அட நீங்க வேற எல்லாம் குத்துமதிப்பா போடுறதுதான், நாம என்ன டாகுடரை பாராட்டியா எழுதிட போறோம்?

NAAI-NAKKS said...

ஓப்பனிங் சீன். அது ஒரு அழகான கிராமம். ///////

விசை படத்துல இதுஎல்லாம் உண்டா???????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// NAAI-NAKKS said...
ஓப்பனிங் சீன். அது ஒரு அழகான கிராமம். ///////

விசை படத்துல இதுஎல்லாம் உண்டா???????//////

டாகுடர் டாகுடர்ர்ர்ர்.......

NAAI-NAKKS said...

i have a doubt, if all of us post against doctor vijay , minimum 20 people gumming and blamming by bad words, by ph or in blog.. but no body kandu konding u YYYYYYYYY? hi hi hi//////

நேத்து அங்க உங்களுக்கு செம மாத்தாமே....????
அதான் இந்த கமெண்ட்-ஆ?????

NAAI-NAKKS said...

இந்த படத்துல சங்கவி...விசை-க்கு
அம்மாஆஆஆஆஆஆதானே...??????????????????????????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////NAAI-NAKKS said...
i have a doubt, if all of us post against doctor vijay , minimum 20 people gumming and blamming by bad words, by ph or in blog.. but no body kandu konding u YYYYYYYYY? hi hi hi//////

நேத்து அங்க உங்களுக்கு செம மாத்தாமே....????
அதான் இந்த கமெண்ட்-ஆ?????///////

யோவ் ஏன்யா.....?

NAAI-NAKKS said...

இடைவேளைக்குப் பின்னர் டாகுடர் சென்னைக்குச் சென்று தீவிரவாத கும்பலின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கிறார். அதற்கான காட்சிகளின் நீளத்தை இயக்குனர் சற்றுக் குறைத்திருக்கலாம். /////

அப்படி குறைச்சா படம்
குறும்படமா போயிடுமே....?????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////NAAI-NAKKS said...
இந்த படத்துல சங்கவி...விசை-க்கு
அம்மாஆஆஆஆஆஆதானே...???????????????????????//////

ராங்க் கொஸ்டின்........ திஸ் இஸ் ரிஜக்டட்.....

கோவை நேரம் said...

என்னது....படம் ரிலீஸ் ஆயிடுச்சா...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கோவை நேரம் said...
என்னது....படம் ரிலீஸ் ஆயிடுச்சா...?/////

பதட்டப்படாதீங்க, படம் எடுப்பாங்களோ இல்லையோன்ன பயத்துல நாங்கதான் கொஞ்சம் அவசரப்பட்டு ரிலீஸ் பண்ணிட்டோம்....

NAAI-NAKKS said...

ஒனேர் சார்...ஒனேர் சார்...பேசுனபடி
அந்த லாக்கர்-ல உள்ள மொத்த சமாசாரத்தையும்....அனுப்பிடணும்...
சொல்லிப்புட்டேன்....
நன்றி...வணக்கம்...

Anonymous said...

ஏன் உங்களுக்கு விஜய் மேலே மட்டும் ஒரே காண்டு, ரஜினி படங்கள விடவா அரைச்ச மாவையே அரைக்கராறு, பாவம் விடுங்க....

Madhavan Srinivasagopalan said...

encounter ekambaram..!!

FOOD NELLAI said...

// NAAI-NAKKS said...
i have a doubt, if all of us post against doctor vijay , minimum 20 people gumming and blamming by bad words, by ph or in blog.. but no body kandu konding u YYYYYYYYY? hi hi hi
>>>>>>>>>>>>>>>>>>>>>>>
யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ் போஸ்ட் படிச்சியா??????////////
எங்க போனாலும் இந்த நக்ஸ் தொல்லை தாங்கலப்பா! வளைச்சு வளைச்சு கமெண்ட் போட்டீங்க,சரி, எதுக்காக சிபி பதிவைப் படிக்காம கமெண்ட் போடுறதை போட்டுக்கொடுக்குறீங்க? சேம்சைட் கோலா?

FOOD NELLAI said...

விஜயின் புகழ் பரப்பும் தங்களுக்கு நன்றி சார்!

கோகுல் said...

//இயக்குனர் டுப்பாக்கியை பின்நவீனத்துவ குறியீடாக பயன்படுத்தி அதன் மூலம் ரசிகர்களுக்கு எதையோ உணர்த்த முயன்றிருக்கிறார். //

ஆஹா இதுவல்லவோ பின்நவீனத்துவம்.
தியேட்டர்ல தெரியுது,கேண்டீன்ல தெரியுது.சைக்கிள் ஸ்டாண்டில தெரியுது.

Yoga.S.FR said...

வணக்கம்!///இடைவேளைக்குப் பின்னர் டாகுடர் சென்னைக்குச் சென்று....////இடைவேளையில் என்ன செய்தார் என்று கடைசி வரை சொல்லவேயில்லையே????

Philosophy Prabhakaran said...

என்னது அவ்வளவுதானா... தோட்டா தெறிக்கும் வசனங்கள், இயக்குனரிடம் சில கேள்விகள், ஹீரோ பல்பு வாங்கிய கடைகள் இதெல்லாம் கிடையாதா...

மொக்கராசா said...

இவ்வளவு சொல்லிய நீங்கள்...இப்படம் பவர்ஸ்டாரின் அடுத்த படமான 'ராணாவின்' அப்பட்டமான தழுவல் என்பதை குறிப்பிட வில்லை.

மொக்கராசா said...

அடுத்ததாக பவர்ஸ்டார் துப்பாக்கிக்கு போட்டிய நடித்த C.K.47 படத்தின் விமர்சனம் நாளை மலரும்...
அதயும் பன்னி தன் பொங்கரங்களால் படத்தின் விமர்சனத்தை மின்ன வைப்பாரு

மொக்கராசா said...

//மொத்தத்தில் டுப்பாக்கி தமிழில் வந்திருக்கும் ஒரு உலகப்படம்.//

அப்ப எங்கள் பவர்ஸ்டார் படங்கள் அனைத்தும் உலக தரத்தை மிஞ்சிய மிலுக்கி வே படம்.அயல் கிரக தேசதினரும் அசந்து போகும் நடிப்பு எங்கள் பவர்ஸ்டார் நடிப்பு....

(கொஞ்சம் ஓவரா தான் போயிட்டேனோ)

வெளங்காதவன் said...

Follow up!!!!

#I'm pisi, I'm pisi...

வெளங்காதவன் said...

//மாலுமி said...
/// தங்கை சாப்பிடாமல் இருக்கும் போது தானும் சாப்பிடாமல் இருப்பது ஹைலைட்.. ///
என்ன சரக்கு மச்சி ???
////

karrrrrrrrrrrrrr thththuuuuuuuuuu...................

#Votka va irukkumyaa!!!

வைகை said...
This comment has been removed by the author.
வைகை said...

பதிவர்களுக்காக பழைய டாகுடர் படங்களைத் தீவிர ஆய்வு செய்து டாகுடரின் புதுப்பட விமர்சனங்களை நாம் முன்கூட்டியே தருவது பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள்/////


ஆமா..இவரு அப்பிடியே உலக மக்களுக்கு சேவை பண்றாரு.. அத சொல்லிவேற காமிக்கிறாரு :-)

வைகை said...

இப்போது உங்களுக்காக டுப்பாக்கி.
இப்படம் நிறுத்தப்பட்டதாக திடீரென்று தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது////////


ஏன்? எங்கள மாதிரி சந்தோசப்பட்டவன்கள உன் கண்ணுக்கு தெரியலையா? :-)

வைகை said...

சென்று கண்டுகளிக்க விரும்புபவர்கள் உடனே ப்ளாக்கை விட்டு அப்பீட் ஆகிக் கொள்ளவும்//

கார்பரேசன் கக்கூஸ் மாதிரி இருக்கு? இது ப்ளாக்கா? சொல்லவேயில்ல? :-)

வைகை said...

உடனே தடதடவென ஓப்பனிங் சாங் ஆரம்பிக்கிறது. பாடல் முடியும் வரை நம்மால் சீட்டில் உக்காரவே முடியவில்லை.//

ஏன்? பார்த்ததுமே வழக்கம்போல கக்கா போயிட்டியா? சின்ன பையன் டாகூட்டர் படமெல்லாம் பாக்காதனா கேட்டியா நீ? :-))

வீடு K.S.சுரேஸ்குமார் said...

//நிகழ்வாக பன் சாப்பிடும் போட்டி ஆரம்பிக்க இருக்கிறது.//

எங்க தலைவர் பன்னாடை...ஓ..சாரி பன்னாட்டு ரசிகர்களும் ரசிக்கும் பன்பட்டவர் என்பதை கூறும் பதிவு! எருமை...அடச்சே...! அருமை!

வீடு K.S.சுரேஸ்குமார் said...

@தமிழ்வாசி பிரகாஷ் said...
டுப்பாக்கி குண்டு தீந்து போன என்ன செய்றது அண்ணே...//
யோவ் மக்கா டுப்பாக்கிய உங்க காதுக்குள்ள விட்டு நல்லா ஆட்டுய்யா...

வீடு K.S.சுரேஸ்குமார் said...

//புலி உறுமும் சத்தம் கேட்கிறது//
புலிக்கு பேதியாகிருக்குமே டாகுடரை பார்த்து

வீடு K.S.சுரேஸ்குமார் said...

//பயங்கரமான உறுமலுடன் ஒண்டிப் புலி கெட்டப்பில் டாகுடர் எங்கிருந்தோ பறந்து வந்து நடுவில் குதித்து, அப்படியே சைடில் திரும்பி கேமராவை பார்த்து புன்னகைக்கிறார்.//

குழந்தைகள் பயப்படும் வன்முறை காட்சி சென்சார்...சென்சார்

வீடு K.S.சுரேஸ்குமார் said...

//எழுதி வைத்துக் கொள்ளுங்கள், இந்த வருடம் சிறந்த நடிகருக்கான அனைத்து விருதுகளையும் அள்ளப் போவது டாகுடர் தான்.//

கல்வெட்டுல பொறிக்கலாமா பன்னிக்குட்டியார் அவர்களே

வீடு K.S.சுரேஸ்குமார் said...

//நேர்மையான போலீஸ் அதிகாரியாக வரும் நடிகர் நடிப்பில் பின்னியெடுத்திருக்கிறார்.//

ஒரு நாற்பது கூடை பின்னியிருப்பாரா?

வீடு K.S.சுரேஸ்குமார் said...

//டுப்பாக்கியைப் பார்த்து அனைவருமே பயப்படுவது போன்று வைத்திருப்பதற்கு இயக்குனருக்கு ஒரு ஸ்பெசல் பாராட்டு.//

"A" படம் போல

வீடு K.S.சுரேஸ்குமார் said...

//தமிழில் வந்திருக்கும் ஒரு உலகப்படம். அனைவரும் தவறாமல் பார்த்து தமிழ்சினிமாவை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லுங்கள்.//

என்னங்கோ விமர்சனம் முடிஞ்சிருச்சு!
டுப்பாக்கி படம் விமர்சனம் சூப்பரு!!!டப்பாகி எப்ப வரும் என காத்திருக்கும் டாகுடரின் ஏசி(கொய்யால எத்தனை நாளைக்கு விசிறியா இருக்கிறது?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// NAAI-NAKKS said...
ஒனேர் சார்...ஒனேர் சார்...பேசுனபடி
அந்த லாக்கர்-ல உள்ள மொத்த சமாசாரத்தையும்....அனுப்பிடணும்...
சொல்லிப்புட்டேன்....
நன்றி...வணக்கம்...///////

அடுத்த என்கவுண்ட்டர் இவருக்குத்தான்யா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// எனக்கு பிடித்தவை said...
ஏன் உங்களுக்கு விஜய் மேலே மட்டும் ஒரே காண்டு, ரஜினி படங்கள விடவா அரைச்ச மாவையே அரைக்கராறு, பாவம் விடுங்க....////

இவரு டாகுடர் ரசிகர்டோய்.... அத நான் கண்டுபுடிச்சிட்டேண்டோய்ய்...

ப.செல்வக்குமார் said...

டாகுடருக்கு இந்தப் படம் எப்படியோ உங்களுக்கு இந்தப் பதிவு கலக்கலா வந்திருக்குணா :))))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// Madhavan Srinivasagopalan said...
encounter ekambaram..!!///

டுமீல்ல்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// FOOD NELLAI said...
// NAAI-NAKKS said...
i have a doubt, if all of us post against doctor vijay , minimum 20 people gumming and blamming by bad words, by ph or in blog.. but no body kandu konding u YYYYYYYYY? hi hi hi
>>>>>>>>>>>>>>>>>>>>>>>
யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ் போஸ்ட் படிச்சியா??????////////
எங்க போனாலும் இந்த நக்ஸ் தொல்லை தாங்கலப்பா! வளைச்சு வளைச்சு கமெண்ட் போட்டீங்க,சரி, எதுக்காக சிபி பதிவைப் படிக்காம கமெண்ட் போடுறதை போட்டுக்கொடுக்குறீங்க? சேம்சைட் கோலா?////////

ஹஹ்ஹா.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////FOOD NELLAI said...
விஜயின் புகழ் பரப்பும் தங்களுக்கு நன்றி சார்!////

நன்றி ஆபீசர்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கோகுல் said...
//இயக்குனர் டுப்பாக்கியை பின்நவீனத்துவ குறியீடாக பயன்படுத்தி அதன் மூலம் ரசிகர்களுக்கு எதையோ உணர்த்த முயன்றிருக்கிறார். //

ஆஹா இதுவல்லவோ பின்நவீனத்துவம்.
தியேட்டர்ல தெரியுது,கேண்டீன்ல தெரியுது.சைக்கிள் ஸ்டாண்டில தெரியுது.//////

அப்பாடா ஒருத்தராவது பின்நவீனத்தை புரிஞ்சி வெச்சிருக்காரே.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Yoga.S.FR said...
வணக்கம்!///இடைவேளைக்குப் பின்னர் டாகுடர் சென்னைக்குச் சென்று....////இடைவேளையில் என்ன செய்தார் என்று கடைசி வரை சொல்லவேயில்லையே????//////

இடைவேளைல என்ன பண்ணி இருப்பாரு, முட்ட போண்டாவும் முறுக்கும் சாப்புட்டிருப்பாரு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Philosophy Prabhakaran said...
என்னது அவ்வளவுதானா... தோட்டா தெறிக்கும் வசனங்கள், இயக்குனரிடம் சில கேள்விகள், ஹீரோ பல்பு வாங்கிய கடைகள் இதெல்லாம் கிடையாதா...//////

யோவ் நான் என்ன அவரா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// மொக்கராசா said...
இவ்வளவு சொல்லிய நீங்கள்...இப்படம் பவர்ஸ்டாரின் அடுத்த படமான 'ராணாவின்' அப்பட்டமான தழுவல் என்பதை குறிப்பிட வில்லை./////

பவர்ஸ்டாரின் படத்தை தழுவும் அளவுக்கு இன்னும் டாகுடர் வளரவில்லை என்பதால் அதை வெளிப்படையாக குறிப்பிடவில்லை...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மொக்கராசா said...
அடுத்ததாக பவர்ஸ்டார் துப்பாக்கிக்கு போட்டிய நடித்த C.K.47 படத்தின் விமர்சனம் நாளை மலரும்...
அதயும் பன்னி தன் பொங்கரங்களால் படத்தின் விமர்சனத்தை மின்ன வைப்பாரு///////

பவர்ஸ்டார் பற்றி எழுதுவதற்காக தினமும் முட்டையும் பாலும் குடித்துக் கொண்டிருக்கிறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
//மொத்தத்தில் டுப்பாக்கி தமிழில் வந்திருக்கும் ஒரு உலகப்படம்.//

அப்ப எங்கள் பவர்ஸ்டார் படங்கள் அனைத்தும் உலக தரத்தை மிஞ்சிய மிலுக்கி வே படம்.அயல் கிரக தேசதினரும் அசந்து போகும் நடிப்பு எங்கள் பவர்ஸ்டார் நடிப்பு....

(கொஞ்சம் ஓவரா தான் போயிட்டேனோ)/////

இல்ல மொக்க பவர்ஸ்டார் பத்தி இன்னும் நீ முழுசா சொல்லவே இல்லியே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெளங்காதவன் said...
Follow up!!!!

#I'm pisi, I'm pisi...///////

என்னது பிஸ் அடிக்கிறீங்களா? யோவ் இங்க என்ன கட்டண கழிப்பறைன்னா போட்டிருக்கு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெளங்காதவன் said...
//மாலுமி said...
/// தங்கை சாப்பிடாமல் இருக்கும் போது தானும் சாப்பிடாமல் இருப்பது ஹைலைட்.. ///
என்ன சரக்கு மச்சி ???
////

karrrrrrrrrrrrrr thththuuuuuuuuuu...................

#Votka va irukkumyaa!!!///////

வெளங்கிரும்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வைகை said...
பதிவர்களுக்காக பழைய டாகுடர் படங்களைத் தீவிர ஆய்வு செய்து டாகுடரின் புதுப்பட விமர்சனங்களை நாம் முன்கூட்டியே தருவது பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள்/////


ஆமா..இவரு அப்பிடியே உலக மக்களுக்கு சேவை பண்றாரு.. அத சொல்லிவேற காமிக்கிறாரு :-)/////

இல்லியா பின்ன, எல்லாரும் போய் டாகுடர் படத்த பாத்து அவதிப்படுறதுக்கு பதிலா இங்கேயே முடிச்சிடலாம்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
இப்போது உங்களுக்காக டுப்பாக்கி.
இப்படம் நிறுத்தப்பட்டதாக திடீரென்று தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது////////


ஏன்? எங்கள மாதிரி சந்தோசப்பட்டவன்கள உன் கண்ணுக்கு தெரியலையா? :-)///////

நான் சொல்லி இருக்கறது ரசிகர்களை, அப்போ நீயும் டாகுடர் ரசிகர்தானா? ங்கொய்யால சொல்லவே இல்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வைகை said...
சென்று கண்டுகளிக்க விரும்புபவர்கள் உடனே ப்ளாக்கை விட்டு அப்பீட் ஆகிக் கொள்ளவும்//

கார்பரேசன் கக்கூஸ் மாதிரி இருக்கு? இது ப்ளாக்கா? சொல்லவேயில்ல? :-)////

சரி வந்து கக்கா போனதுக்கு ச்சீ.... கமெண்ட் போட்டதுக்கு ரெண்டு ரூவா கொடுத்துட்டு போ....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
உடனே தடதடவென ஓப்பனிங் சாங் ஆரம்பிக்கிறது. பாடல் முடியும் வரை நம்மால் சீட்டில் உக்காரவே முடியவில்லை.//

ஏன்? பார்த்ததுமே வழக்கம்போல கக்கா போயிட்டியா? சின்ன பையன் டாகூட்டர் படமெல்லாம் பாக்காதனா கேட்டியா நீ? :-))////////


படம் பாக்கறதே அதுக்குத்தானே....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வீடு K.S.சுரேஸ்குமார் said...
//நிகழ்வாக பன் சாப்பிடும் போட்டி ஆரம்பிக்க இருக்கிறது.//

எங்க தலைவர் பன்னாடை...ஓ..சாரி பன்னாட்டு ரசிகர்களும் ரசிக்கும் பன்பட்டவர் என்பதை கூறும் பதிவு! எருமை...அடச்சே...! அருமை!//////

பன் பன்னாடை ச்ச்சே... பன்னாடு எப்பேர்ப்பட்ட அரிய தத்துவம்.... டாகுடர் வாழ்க......

ப.செல்வக்குமார் said...

எது எப்படியோ எங்கள் பவர்ஸ்டாரின் படங்களுக்கு நிகராக எவராலும் நடிக்க இயலாது என்பதை மட்டும் ஆணித்தரமாக இங்கே பதிவு செய்துவிட்டு,ஒரு பவர் ஸ்டார் ரசிகனாக திமிரோடு , பெரும் உவகையோடு கிளம்புகிறேன். நன்றி வணக்கம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வீடு K.S.சுரேஸ்குமார் said...
@தமிழ்வாசி பிரகாஷ் said...
டுப்பாக்கி குண்டு தீந்து போன என்ன செய்றது அண்ணே...//
யோவ் மக்கா டுப்பாக்கிய உங்க காதுக்குள்ள விட்டு நல்லா ஆட்டுய்யா.../////

அவர் காது என்ன ஆட்டு உரலா....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வீடு K.S.சுரேஸ்குமார் said...
//புலி உறுமும் சத்தம் கேட்கிறது//
புலிக்கு பேதியாகிருக்குமே டாகுடரை பார்த்து///////

பேதியாகுற சவுண்டுதான் அது....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வீடு K.S.சுரேஸ்குமார் said...
//பயங்கரமான உறுமலுடன் ஒண்டிப் புலி கெட்டப்பில் டாகுடர் எங்கிருந்தோ பறந்து வந்து நடுவில் குதித்து, அப்படியே சைடில் திரும்பி கேமராவை பார்த்து புன்னகைக்கிறார்.//

குழந்தைகள் பயப்படும் வன்முறை காட்சி சென்சார்...சென்சார்////////

குழந்தைகள் மட்டுமா? டைரக்டரே பயந்திட்டாராம், அப்புறம் மந்திரிச்சி வெச்சி படத்த கண்டிய்னியூ பண்ணி இருக்காங்க....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வீடு K.S.சுரேஸ்குமார் said...
//எழுதி வைத்துக் கொள்ளுங்கள், இந்த வருடம் சிறந்த நடிகருக்கான அனைத்து விருதுகளையும் அள்ளப் போவது டாகுடர் தான்.//

கல்வெட்டுல பொறிக்கலாமா பன்னிக்குட்டியார் அவர்களே//////

தஞ்சாவூர்லதானே, அங்க அல்ரெடி ஹவுஸ்புல், பவர்ஸ்டாருக்கு வெச்சாச்சு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வீடு K.S.சுரேஸ்குமார் said...
//நேர்மையான போலீஸ் அதிகாரியாக வரும் நடிகர் நடிப்பில் பின்னியெடுத்திருக்கிறார்.//

ஒரு நாற்பது கூடை பின்னியிருப்பாரா?////

அது கூடையில்ல சடை...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வீடு K.S.சுரேஸ்குமார் said...
//டுப்பாக்கியைப் பார்த்து அனைவருமே பயப்படுவது போன்று வைத்திருப்பதற்கு இயக்குனருக்கு ஒரு ஸ்பெசல் பாராட்டு.//

"A" படம் போல/////

ஏ ஒன் படம்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வீடு K.S.சுரேஸ்குமார் said...
//தமிழில் வந்திருக்கும் ஒரு உலகப்படம். அனைவரும் தவறாமல் பார்த்து தமிழ்சினிமாவை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லுங்கள்.//

என்னங்கோ விமர்சனம் முடிஞ்சிருச்சு!
டுப்பாக்கி படம் விமர்சனம் சூப்பரு!!!டப்பாகி எப்ப வரும் என காத்திருக்கும் டாகுடரின் ஏசி(கொய்யால எத்தனை நாளைக்கு விசிறியா இருக்கிறது?)///////

அப்புறம் விமர்சனத்த முடிக்காம தொடருமா போட முடியும்? டாகுடரின் ஏசின்னா நீங்க டாகுடர் வெச்சிருக்கற போலீஸ் ஆபீசரா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ப.செல்வக்குமார் said...
டாகுடருக்கு இந்தப் படம் எப்படியோ உங்களுக்கு இந்தப் பதிவு கலக்கலா வந்திருக்குணா :))))/////

டாகுடர் பத்தி எழுதுனாலே கலக்கல்தான்....... ஹி..ஹி....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ப.செல்வக்குமார் said...
எது எப்படியோ எங்கள் பவர்ஸ்டாரின் படங்களுக்கு நிகராக எவராலும் நடிக்க இயலாது என்பதை மட்டும் ஆணித்தரமாக இங்கே பதிவு செய்துவிட்டு,ஒரு பவர் ஸ்டார் ரசிகனாக திமிரோடு , பெரும் உவகையோடு கிளம்புகிறேன். நன்றி வணக்கம்./////

பவர்ஸ்டாருக்கு நிகராக நடிப்பது மட்டுமல்ல, பேட்டி கூட யாராலும் கொடுக்க முடியாது என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன், நன்றி வணக்கம்!

தமிழ்வாசி பிரகாஷ் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வீடு K.S.சுரேஸ்குமார் said...
@தமிழ்வாசி பிரகாஷ் said...
டுப்பாக்கி குண்டு தீந்து போன என்ன செய்றது அண்ணே...//
யோவ் மக்கா டுப்பாக்கிய உங்க காதுக்குள்ள விட்டு நல்லா ஆட்டுய்யா.../////

அவர் காது என்ன ஆட்டு உரலா....?///

ம்ம்ம்... ஆட்டு ஈரல்...

வீடு K.S.சுரேஸ்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வீடு K.S.சுரேஸ்குமார் said...
@தமிழ்வாசி பிரகாஷ் said...
டுப்பாக்கி குண்டு தீந்து போன என்ன செய்றது அண்ணே...//
யோவ் மக்கா டுப்பாக்கிய உங்க காதுக்குள்ள விட்டு நல்லா ஆட்டுய்யா.../////

அவர் காது என்ன ஆட்டு உரலா....?///

ம்ம்ம்... ஆட்டு ஈரல்...//

ஈரல் பார்சல் ஒன்னு...

தமிழ்வாசி பிரகாஷ் said...

வீடு K.S.சுரேஸ்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வீடு K.S.சுரேஸ்குமார் said...
@தமிழ்வாசி பிரகாஷ் said...
டுப்பாக்கி குண்டு தீந்து போன என்ன செய்றது அண்ணே...//
யோவ் மக்கா டுப்பாக்கிய உங்க காதுக்குள்ள விட்டு நல்லா ஆட்டுய்யா.../////

அவர் காது என்ன ஆட்டு உரலா....?///

ம்ம்ம்... ஆட்டு ஈரல்...//

ஈரல் பார்சல் ஒன்னு...///

இன்னைக்கு அம்மா பிறந்தநாள், எல்லா ஆடும் பிரியாணியா போயிருக்கு. அங்க போயி வாங்கிக்க

Anonymous said...

டாகுடரு பாவம்...விட்டிருங்க அவரை...

டமில் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு செல்ல முயற்சிக்கிறேன்...-:)

Dr. Butti Paul said...

அப்போ படம் தேறாதா? விமர்சனம் அருமை. (ரொம்ப நாளாச்சில்ல காமெண்டு போட்டு.. அதுதான் சும்மா ஒரு டெம்ப்ளேட் காமென்ட்)

Dr. Butti Paul said...

அண்ணே, அந்த பின்நவீனத்துவ குறியீட்டுக்கு மட்டும் கொஞ்சம் விளக்கம் குடுங்கண்ணே, அது மட்டும் கடைசிவரைக்கும் விளங்கவே இல்ல...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஹா.ஹா..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரெவெரி said...
டாகுடரு பாவம்...விட்டிருங்க அவரை...

டமில் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு செல்ல முயற்சிக்கிறேன்...-:)////////

அதுக்கு அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போகனும்னா அப்படியே பவர்ஸ்டார் படத்தையும் பாத்துடுங்க.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Dr. Butti Paul said...
அப்போ படம் தேறாதா? விமர்சனம் அருமை. (ரொம்ப நாளாச்சில்ல காமெண்டு போட்டு.. அதுதான் சும்மா ஒரு டெம்ப்ளேட் காமென்ட்)//////

இன்னும் படம் ரிலீசாகலீங்கோ... இது சும்மா தமாசு......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// Dr. Butti Paul said...
அண்ணே, அந்த பின்நவீனத்துவ குறியீட்டுக்கு மட்டும் கொஞ்சம் விளக்கம் குடுங்கண்ணே, அது மட்டும் கடைசிவரைக்கும் விளங்கவே இல்ல...//////

விளங்கிட்டா அப்புறம் அது பின்நவீனத்துவமே கெடையாதே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
ஹா.ஹா../////

வாங்க சார்....

சம்பத்குமார் said...

உங்களை பல்சுவை பதிவர்கள் என வலைசரத்தில் பெருமைப்படுத்தியுள்ளேன் நான் ரொம்ம பிஸி என சொல்லாமல் ஆதரவு கொடுங்க.....காந்த கண்ணழகியிடம் சந்தனம் பூசிக்கொண்டு வரவும்!?

பல்சுவை பதிவர்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

கலக்கல் !

Anonymous said...

நண்பன் படத்துல நம்ம தளபதியே திருந்திட்டாரு... ஆனா அவரு படம் பார்த்து கெட்டு போன இந்த பன்னிக்குட்டி ராம்சாமி அண்ணே இன்னும் திருந்தலையே.......

நிலவன்பன் said...

அன்புள்ள தோழமைக்கு, உங்களுக்கு வெர்சாட்டைல் விருதை வழங்குகிறேன் பெற்று கொள்ளுங்கள்! http://www.nilapennukku.com/2012/02/blog-post_26.html

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சம்பத்குமார் said...
உங்களை பல்சுவை பதிவர்கள் என வலைசரத்தில் பெருமைப்படுத்தியுள்ளேன் நான் ரொம்ம பிஸி என சொல்லாமல் ஆதரவு கொடுங்க.....காந்த கண்ணழகியிடம் சந்தனம் பூசிக்கொண்டு வரவும்!?

பல்சுவை பதிவர்கள்///////

நன்றி பாஸ்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// திண்டுக்கல் தனபாலன் said...
கலக்கல் !////

நன்றிங்க....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// மொக்கராசு மாமா said...
நண்பன் படத்துல நம்ம தளபதியே திருந்திட்டாரு... ஆனா அவரு படம் பார்த்து கெட்டு போன இந்த பன்னிக்குட்டி ராம்சாமி அண்ணே இன்னும் திருந்தலையே.......//////

படம் வரட்டும்ணே அப்புறம் யாரு திருந்துனதுன்னு பார்ப்போம்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நிலவன்பன் said...
அன்புள்ள தோழமைக்கு, உங்களுக்கு வெர்சாட்டைல் விருதை வழங்குகிறேன் பெற்று கொள்ளுங்கள்! http://www.nilapennukku.com/2012/02/blog-post_26.html///////

அடப்பாவமே...... ஒரு சாதா பதிவரை ஸ்பெசல் பதிவராக்கிட்டீங்களே....?

கிஷோகர் IN பக்கங்கள் said...

ண்ணா.... இது ரொம்ப அநியாயம்கோ! டாகுடரோட திரைவிமர்சனத்த நான் தான் போடனும் அப்டீன்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். இப்பிடி பொழப்புல மண் அள்ளி போட்டுட்டிகளே

கிஷோகர் IN பக்கங்கள் said...

ண்ணா.... இது ரொம்ப அநியாயம்கோ! டாகுடரோட திரைவிமர்சனத்த நான் தான் போடனும் அப்டீன்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். இப்பிடி பொழப்புல மண் அள்ளி போட்டுட்டிகளே

கிஷோகர் IN பக்கங்கள் said...

//அதன்பிறகு டாகுடர் எவ்வாறு வில்லன்களை ஒழித்துக்கட்டி சென்னையை காப்பாற்றுகிறார் என்பதையெல்லாம் வெண் திரையில் காண்க.//

எதுக்கு வெந்து சாகிறதுக்கா?

கிஷோகர் IN பக்கங்கள் said...

//அதிலும் அடிவாங்கியதைப் பற்றிக் கவலைப்படாமல், அந்த ரிப்பனை தங்கச்சிக்கு கொடுக்க முடியவில்லையே என்று அவர் அழுவது பிரமாதமான நடிப்பு. ஒரு ஆக்சன் ஹீரோ செண்டிமெண்ட் காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்று பாடமே நடத்தி இருக்கிறார் டாகுடர்//

இந்த சீன படிக்கும் போதே எனக்கு அழுகை வந்திடுச்சி. தியேடர்ல பாக்கும் போது என்னெல்லாம் வருமோ?

கும்மாச்சி said...

அண்ணா ஒரிஜினல் படக்கதைவிட இந்த கதை சூப்பருங்க்னா, இந்தாங்க்னா அட்வான்ஸ், அடுத்த டாகுடர் படம் நீங்கதாங்க்னா பண்றீங்க.

சே. குமார் said...

துப்பாக்கி நல்லா வெடிக்குதாமே அண்ணா... முருகதாஸ் குதிரையில் டாக்குடரு ஸ்பீடா ஓடுறாராமே