Thursday, December 16, 2010

பன்னீஸ் கிச்சன்........!

என்னடா இது நம்ம கடைல சமையல் குறிப்பான்னு ஆச்சர்யமா இருக்கா? நேத்துப் போட்ட பதிவுல ஆண்களுக்கு மட்டும்னு போட்டிருந்ததுனால, ஆணாதிக்கவாதி, சாடிஸ்ட் அப்படின்னு நம்ம நலம் விரும்பிகள்(?) பலரும்  எடுத்துச் சொல்றாங்க.  அதுனால தாய்க்குலங்களோட பேராதரவைப் பெறவும், ஆணாதிக்கவாதி என்ற அவச்சொல்லைத் துடைத்தெறியவும், எனக்கு வேற வழியே தெரியல சார்...!

அதுவுமில்லாம நம்ம காரமடை ஜோசியர் வேற ஏதாவது ஒரு உபயோகமான சமையல் குறிப்பு இந்த மாசம் போட்டே ஆகனும்னு முடிவா சொல்லிப்புட்டாரு. நானும் மனச திடப்படுத்திக்கிட்டு நைட்டு புல்லா உக்காந்து யோசிச்சு, பல புத்தகங்கள், இணையதளங்களைப் புரட்டி, திரட்டி உங்களுக்காக ஒரு அருமையான சமையல் குறிப்போட வந்திருக்கேன். பாத்துப் படிச்சு பயனடையுங்க.


ஓக்கே, இப்போ ஸ்டார்ட் பண்ணுவோமா? (ஸ்டெப் பை ஸ்டெப்பாவே போவோம், இல்லேன்னா படிச்சத மறந்திடுவேன்...)


ஸ்டெப் 1:
மொதல்ல அடுப்பப் பத்த வையுங்க... லைட்டர், தீப்பெட்டின்னு உங்களூக்கு எது வசதியோ அத யூஸ் பண்ணுங்க. காஸ்ட்லியான அடுப்புகள்ல ஆட்டோ இக்னிசன் இருக்கும், அடுப்ப ஆன் பண்ணா குபீர்னு பத்திக்கும்.


ஸ்டெப் 2:
நல்ல சுத்தமான வாயகன்ற பாத்திரத்த எடுத்துக்குங்க. சுத்தமா இல்லேன்னா நல்லா சோப்புப் போட்டுக் கழுவிக்குங்க. சுத்தம் ரொம்ப முக்கியம். அப்புறம் கழுவும் போது சோப்புத் துணுக்குகள் ஏதும் ஒட்டிக்கிட்டு இருக்காம நல்லா அலசிக் கழுவனும்.


ஸ்டெப் 3:
பாத்திரத்த அடுப்புல வையுங்க. ஈரம் காயும் வரைக்கும் அப்பிடியே விடுங்க


ஸ்டெப் 4:
அந்தப் பாத்திரத்துல நாலுல மூனுபாகம் வரைக்கும் தண்ணிய ஊத்துங்க. அளவுலாம் குத்துமதிப்பாத்தான் பாக்கனும், அளவு தெரியலேன்னு அடிஸ்கேலு வெச்சுலாம் பாக்கப்படாது.  குத்துமதிப்பு வரலேன்னா, பாதிக்கு மேல கொஞ்சம் இருக்கும் அளவுக்குத் தண்ணிய ஊத்துனாக்கூட போதும்.


ஸ்டெப் 5:
இப்போ உங்களுக்கு எத்தன முட்டை வேணுமோ எண்ணி உள்ள போடுங்க. கொஞ்சம் உப்பும் போட்டுக்கலாம்.


ஸ்டெப் 6:
கேஸ்ச புல்லா வையுங்க. பாத்திரத்த சரியான மூடி போட்டு மூடுங்க. தண்ணி வெச்ச டைம கரெக்டா நோட் பண்ணனும். ரிஸ்ட் வாட்ச் இருந்தா நல்லது.


ஸ்டெப் 7:
சரியா 6 நிமிசம் வெயிட் பண்ணி, பாத்திரத்தக் கவனமாகத் திறந்து பார்க்கவும். நீர்க்குமிழிகள் கொஞ்சம் கொஞ்சமா வரத்தொடங்கி இருக்கும். (5 லிட்டருக்கும் குறைவான பாத்திரம்னா 3 நிமிசத்திலேயே பாத்திடனும்). திரும்ப பாத்திரத்த மூடி அப்பிடியே வெச்சுடுங்க.


ஸ்டெப் 8:
இப்போ சரியா 16 நிமிசம் கழிச்சுப் போயி திறந்து பார்த்தீங்கன்னா... தண்ணி கலகலன்னு கொதிச்சிக்கிட்டு இருக்கும். திறந்து பார்க்கும் போது மேல தெறிச்சுடாம கவனாமா இருந்துக்கனும்.


ஸ்டெப் 9:
இன்னொரு 5 நிமிசம் கழிச்சு அடுப்ப ஆஃப் பண்ணிடுங்க.  தண்ணிய கீழ ஊத்திடாம அப்பிடியே ஒரு 5 நிமிசம் வையுங்க.


இப்போ சுவையான.............சூடான......................... சுவையான............................ அவிச்ச முட்டை ரெடி................................!!!

(வெயிட் வெயிட்.....அப்பிடியே சாப்பிட்டுத் தொலச்சிடாதீங்க, அப்புறம் எனக்குக் கெட்ட பேராயிடும். தோடுகள மொதல்ல உறிச்சுக்கனும், தெரியுதா?)

என்ன நேயர்களே, இன்னிக்கு அவிச்ச முட்டை எப்படி பண்ணனும்னு பாத்தோம், அடுத்த வாரம் அத எப்பிடி சாப்புடனும்னு பார்ப்போமா?




பி.கு. நண்பர்களே உங்களுக்காகவே சென்னை எக்மோர்ல அஞ்சு ரூம் போட்டு வெச்சிருக்கேன். அழுகுறவங்க போயி அழுதுட்டு வாங்க.......!

!

Wednesday, December 15, 2010

நான் எயிட் நாட் அவுட்…. நீங்க? 18+ (ஆண்கள் மட்டும்...)




காலேஜு படிக்கும்போது, எனக்கு ஒரு பிரண்டு இருந்தாங்க, ஆளு பாக்க நம்ம வருங்கால மொதல்வரு, தமிழகத்தின் விடிவெள்ளி சாம் ஆண்டர்சன் மாதிரியே இருப்பான். என்ன இன்னும் கொஞ்சம் குண்டுன்னு கூட சொல்லலாம். ஆளப் பாத்த உடனே பளிச்சின்னு ஒரு அறை விட்டுட்டுத்தான் பேசவே தோனும், அப்பிடி ஒரு பர்சனாலிட்டி. மொத நாளு காலேஜுக்கு போறேன்… கேட்டுக்குள்ள நுழையறேன்.. எதிர்த்தாப்புல இந்தப் பன்னாடையும் வந்தான். அட்மிசன் டைம்லேயே பாத்திருந்ததுனால, இந்த நாயும் நம்ம க்ளாஸ்தான்னு தெரியும். கொஞ்ச தூரம் சும்மா வந்தவன், கேட்டாம்பாருங்க ஒரு கேள்வி…

பாஸ் நான் எயிட் நாட் அவுட்……நீங்க…?

அப்படின்னா..?

அதான் உங்க ஸ்கோரு…?

எந்த…. ஸ்கோரு….. ? (ஏதோ புரிஞ்ச மாதிரி இருந்துச்சு… அப்பிடியே அவனப்பார்த்தா…… நமுட்டுச் சிரிப்பா சிரிக்கிறான்…. வெளங்கிரும்… மொத நாளே இப்படியா?)

பாருங்க சார், காலேஜ்ல சேரும்போதே இந்தப் பன்னாடைங்க என்ன லெவல்ல இருக்கானுங்கன்னு…! எனக்கு திக்குன்னு ஆயிப்போச்சு, இவனுக கூடவுலாம் படிச்சி…. முடிச்சு…. என்னென்ன ஆகப்போகுதோன்னு……. !

அவனுக்கு நாங்க ஒரு பேரு வெச்சிருந்தோம்… அது 100% சென்சார் பண்ணியே ஆகவேண்டிய வார்த்தை… அப்படி ஒரு பேரு….. அதுனால இங்க அவனை பன்னாடைன்னே வெச்சுக்குவோம்!

காலேஜ் ஆரம்பிச்சு முணு நாலு மாசம் இருக்கும், எல்லாரும் பிரண்ட்ஸ், குருப்புன்னு செட்டாக ஆரம்பிச்சுட்டாங்க. இந்த நாய எவனுமே சேத்துக்கல (பின்னே எல்லாருகிட்டேயும் போயி உங்க ஸ்கோரு என்னான்னு கேட்டா?) இந்தப் பன்னாட என்ன பண்ணுச்சு தெரியுமா? டெய்லி பீரு வாங்கி நாலஞ்சு பேர கூட சேத்துக்கிட்டு மேட்டர் கதையா சொல்றது, அதுவும் அவனோட சொந்த அனுபவத்தையே, இஞ்ச் பை இஞ்ச்சா சொல்லுவான். சும்மா சொல்லக்கூடாது சார், பேசுறதுல அவன யாருமே மிஞ்ச முடியாது. அவன் சொல்ல சொல்ல கண்ணுக்கு முன்னாடி அப்பிடியே காட்சி தெரியும். (அந்த டைம்ல பசங்க எல்லோரும் கொஞ்ச நாளு மேட்டர் படம் பாக்குறதையே நிறுத்தி வெச்சிருந்தானுங்கன்னா பார்த்துக்குங்களேன்!).

ரெண்டு மூனு நாள்ல நானும் அவன் பீரு பார்ட்டில சேந்துட்டேன். கதை ஒவ்வொண்ணும், எப்பிடி இருக்கும் தெரியுமா…? பிட்டுப் படம், ஏன் இங்கிலிபீசு படம்லாம் கூட பக்கத்திலேயே நிக்க முடியாது. அவன சேர்ல உக்கார்த்தி வெச்சுட்டு, அவன் காலச் சுத்தி நாங்க எச்சி ஒழுக உக்காந்த்துக்கிட்டு கதை கேப்போம். யாரும் வெளி ஆளுங்க பாத்தாங்கன்னா யாரோ பெரிய மனுசன் பிரசங்கம் பண்றாருன்னு நெனச்சுப்பாங்க.

இப்பிடி நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு. ஆனா, ஆடுன காலும் பேசுன வாயும் சும்மா இருக்குமா? பன்னாட இங்கேயும் வேலய தொடங்கிருச்சு. நல்ல அம்சமான புள்ளைங்களா செலக்ட் பண்ணி, போயி நூல் விடும், எப்படின்னே சொல்ல முடியாது, ரெண்டு நாள்ல செட் ஆகிடும். அப்புறம் இவனையே சுத்திச் சுத்தி வருவாளுங்க (அது எப்புடி சார், சூப்பர் பிகருங்க எல்லாத்துக்கும், சொல்லி வெச்ச மாதிரி இந்தப் பன்னாடைப் பரதேசி நாய்ங்களையே புடிச்சுத் தொலைக்குது…?) இப்படிப் பண்ணிப் பண்ணியே கொஞ்ச நாள்ல ஒரு பெரிய டீமையே சேத்துட்டான். லஞ்சு டைம்ல ஹாஸ்டலுக்கு வரமாட்டான். பொண்ணுங்க கூடவே உக்காந்திருவான். எல்லாரு டிபன் பாக்ஸ்லேயும் கொஞ்சம் கொஞ்சம்னு நல்லா திம்பான் (அந்தச் சமயத்துல நம்மல பக்கத்துல கூட சேத்துக்க மாட்டான் சார்! ஏன் தெரிஞ்சமாதிரி கூட காட்டிக்க மாட்டான் நாதாரி…!).

கொஞ்ச நாளு இருக்கும், அப்போ அவன் கண்ணுல பட்ட பொண்ணு, ஒரு விதவை. ஆமா, சின்ன வயசுலேயே கல்யாணம் ஆகி, கணவனையும் இழந்துட்டு படிக்க வந்திருக்கும் பெண். எங்கள விட வயசு அதிகம் தான். ரொம்ப அமைதியா இருக்கும். பேரு மாலா. இந்தப் பன்னாட அவளப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டு, போயி வழிஞ்சு கிழிஞ்சு பழக்கம் புடிச்சிட்டான். டெய்லி கடலைதான். அடுத்து என்ன செய்யப் போறான்னு எங்க எல்லாருக்கும் தெரிஞ்சே இருந்துச்சு. இந்தப் பொண்ண மட்டுமாவது விட்டுடுன்னு சொல்லிப்பாத்தோம், கேக்க மாட்டேன்னுட்டான். மொதத் தடவையா அவன் கூட சேந்ததுக்கு வருத்தப்பட்டோம்.

அந்த டைம்ல ஏதோ லீவு, ஊருக்குப் போயிருந்தேன். காலைல நல்லாத் தூங்கிட்டு இருந்தேன். அப்பா சத்தம் போட்டு போன் பேசிக்கிட்டு இருந்தார். லீவு நாள்னா அவருக்கு மட்டும் எப்பிடியோ காலங்காத்தால போன் வந்துடும். (நடுராத்திரி 4 மணிக்கு எந்திரிச்சு, தானே டீ போட்டுக்கிட்டு, எல்லாத்தையும் தூங்க விடாம இம்சை பண்ற பார்ட்டிங்க.. அனேகமா எல்லா அப்பாக்களும் இப்படித்தான்னு பயலுக சொல்றாய்ங்க….!). பேசுன பேச்சுல நானும் முழிச்சிட்டேன். பேச்சு நம்ம மாலாவப் பத்தி வந்த மாதிரி தோனிச்சா, தூங்குற மாதிரி(?) படுத்துக்கிட்டே பேச்சக் கவனிக்க ஆரம்பிச்சேன். பாத்தா எங்கப்பாவோட பழைய பிரண்டோட பொண்ணுதான் மாலாவாம். எங்கப்பா, எல்லாத்தையும் பேசிட்டு கடைசில நம்ம பையனும் அங்கதான் படிக்கிறான்னு பெருமையா சொல்லிமுடிச்சாரு.

நானும் அப்போதான் தூங்கி எந்திரிச்ச மாதிரி எந்திருச்சேன். அப்பா உடனே டேய்.. மாலான்னு ஒரு பொண்ணு உங்க காலேஜுல படிக்குதான்னு கேட்டாரு. தெரியும்னு சொல்லிட்டா அப்புறம் வீட்ல நம்ம இமேஜு (?) என்னாகுறது, அதுனால் டீசன்ட்டா இல்ல எனக்குத் தெரியாதுன்னு சொல்லிட்டேன். அவரு புல் டீடெயிலையும் சொல்லி, காலேஜுல போயி பாத்துப் பேசுன்னாரு.

நான் அப்பவே முடிவு பண்ணிட்டேன், இத வெச்சே அந்தப் பன்னாடைக்கு ஒரு முடிவு கட்டிறனும்னு. காலேஜுக்குப் போனதும், பசங்க எல்லாருகிட்டேயும் அந்த மேட்டர சொல்லிட்டேன். அதுக்கிடைல எங்கப்பா பிரண்டு, அவரு பொண்ணுகிட்டேயும் மேட்டர சொல்லிட்டாரு போல. மொத நாளே, மாலா என்னத் தேடி வந்திருச்சு. என்ன தம்பி, அப்பா எல்லாம் சொன்னாரான்னு கேட்டுச்சு. கொஞ்சம் நேரம் பழைய கதைகள் பேசிக்கிட்டு இருந்தோம். அந்த நேரத்துல நம்ம பன்னாட எங்கிருந்தோ வந்தான். எங்க ரெண்டு பேரையும் பக்கத்துல பாத்துட்டு, பதறிட்டான்.

அப்புறம் கிட்ட வந்து உங்க ரெண்டு பேரையும் அறிமுகம் பண்ணி வெக்கிறேன்னு ஆரம்பிச்சான். அதுக்கு மாலா, நீ என்னத்த அறிமுகம் பண்ணி வெக்கிறது, எனக்கு இவன சின்ன வயசுல இருந்தே தெரியும், என் தம்பி மாதிரின்னு சொல்லிடுச்சு. உடனே நம்ம பண்னாட மூஞ்சி போன போக்கப் பாக்கனுமே? மெல்ல அப்பிடியே நழுவி எஸ்கேப் ஆனவன் தான், அப்புறம் மாலாகிட்ட மட்டுமில்ல எங்கிட்டக் கூட பேசுறதையே நிறுத்திட்டான். மாப்பு, காலேஜுக்கு வந்து படிச்சியோ இல்லியோ ஒரு உருப்படியான வேல பண்ணியிருக்கேடான்னு பசங்கள்லாம் ரொம்ப சந்தோசப்பட்டானுங்க.

அன்னிக்குக் காலேஜ் கடைசி நாளு, பன்னாடையும் நானும் காலேஜ் ஆபிஸ் முன்னாடி நின்னுக்கிட்டு இருந்தோம். ஏதோ பேசனும் போல தோணுச்சு. அவனப் பாத்துக் கேட்டேன்..

என்ன மாப்பு, இப்போ ஹன்ரட் நாட் அவுட்டா?

அதுக்கு அவன் பார்த்த பார்வை இருக்கே…….



எச்சரிக்கை: இப்பதிவில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனை....... அல்ல!

Monday, December 13, 2010

வலைச்சரத்தில் குமுறிய டெர்ரர் கும்மி குரூப்ஸ்.....!

கடந்த வாரம் வலைச்சரத்தில் எழுதிக் கொண்டிருந்த பொழுது, நண்பர் வெங்கட், வலைச்சரத்துல இதுவரைக்கும் ஒரு பதிவுக்கு வந்த அதிகபட்ச கமென்ட் 320 தான். அத பிரேக் பண்ண முயற்சி பண்ணுங்களேன்னு சொன்னார். நானும் சரி பார்ப்போம்னு சொல்லி வைத்தேன். அடுத்த நாள் காலைல பாத்தா கும்மி டீம் மெம்பர்ஸ்லாம் தீயா நிக்கிறாங்க, எப்படியும் ரிக்கார்ட் பிரேக் பண்ணனும்னு! அப்போ இலக்கு 500 ன்னு தான் வெச்சாங்க. ஆனா புல்லட் ட்ரெய்ன் கெளம்புன மாதிரி கெளம்புச்சு பாருங்க நம்ம கும்மிப் பட்டாளம், 1300 தாண்டி எமர்ஜென்சி பிரேக் போட்டுத்தான் நிப்பாட்ட முடிஞ்சது. கடைசியா இன்று காலை வரை உள்ள கமென்ட்டுகளின் எண்ணிக்கை 1328.

ஆனால் தமிழ்ப்பதிவர்கள் வட்டாரத்தில் இதுவரை அதிகபட்சமாக 16000 கமென்ட்டுகள் ஒரே பதிவில் போடப்பட்டிருப்பதாகத் தகவல். அதை எங்கள் டெர்ரர் கும்மி குரூப்ஸ் சீக்கிரமே முறியடிக்க வாழ்த்துகிறேன்!

.




கமென்ட்டுகள் போட்டு சாதனை நிகழ்த்த ஆதரவு தந்த மற்ற நண்பர்கள்
மற்றும் அனைவருக்கும் நன்றி!

தொடர்ந்து இணைந்திருப்போம் நண்பர்களே.....!



பி.கு.: நண்பர்கள் பெயர் எதுவும் விடுபட்டிருக்குமானால் பொறுத்தருள்க...!







டாகுடரின் காவலன் ரிலீசை எதிர்பார்த்த படி....

(வறுத்தகரிய...சேச்சே...  விருதகிரியவே கண்ட கண்ட பயலுக எதிர்பார்த்துக் கெடந்து பாத்தானுக, நாம காவலன் படத்த எதிர்பார்க்கக் கூடாதுங்களா?)

!

Thursday, December 9, 2010

அமெரிக்காவில் இருந்து எனக்கு வரும் மெயில்கள்....!



ரெண்டு வருசத்துக்கு முன்னாடி பாரின்ல (அமெரிக்காவுல) இருந்து ஒருத்தரு ஈமெயிலு அனுப்பி இருந்தாருங்க. நமக்கெல்லாம் பாரின்ல இருந்து மெயில் வருதே என்னமோ ஏதோன்னு அவசரம் அவசரமா தொறந்து படிச்சா....அது அவரு என்னமோ மருந்து விக்கிறாராம் உங்களுக்கு வேணுமான்னு கேட்டிருந்தாருங்க. அது என்ன மருந்துன்னா கேக்குறீங்க, அட ஏங்க, நீங்க வேற,  தலவலி மருந்தா இருந்தா பரவால்லியே அது என்னமோ வயாகராவாம், எனக்குன்னு பெசல் ஆஃபராம். அதுக்குத் தபால் செலவு வேற தள்ளுபடியாம்.. எது எதுக்கு தள்ளுபடி கொடுக்குறானுங்க, பாத்தீங்களா?


நான் வேற பொறுப்பா, சாரி சார், இந்த மருந்து எனக்கு தேவையில்ல, எங்க ஊருலேயே இது சீப்பா கெடைக்குது, வேற யாராவது தேவைப்படுறவங்களுக்கு கொடுங்கன்னு ரிப்ளை போட்டேன். அன்னிக்குப் புடிச்சதுங்க கெரகம், ரெண்டு வருசமா, டெய்லி அந்த ஆளு எனக்கு மெயில் பண்றாருங்க. அந்த மருந்தே வாங்கித்தான் ஆகனும்னு அடம் புடிக்கிறாருங்க. நானும் என்னென்னமோ பண்ணிப் பாத்துட்டேங்க, ஆளு மசியற மாதிரி இல்ல. ஸ்பேம்ல போட்டாலும் பேர மாத்தி மாத்தி வர்ராருங்க. வயாகரா வாங்குனாத்தான் விடுவார்னு என் பிரண்டு சொல்றான், அதுனால யாருக்காவது இந்த மருந்து வேணும்னா சொல்லுங்கய்யா.... இவன அப்பிடியே உங்க கூட கோர்த்து விடுறேன்...!


என்னத்தச் சொல்ல?

இதாவது பரவால்லீங்க, இன்னொருத்தன் பண்ற அட்டூழியத்துக்கு. அவனும் அதே ஊருதாம்போல! ஒரு 6 மாசத்துக்கு முன்னாடி இருக்கும்னு நெனக்கிறேன், ஒரு நாளு உங்க ப்ரண்ட்ஸ பாக்கனுமான்னு சப்ஜக்டோட ஒரு மெயில் வந்துச்சுங்க. ஓப்பன் பண்ணிப் பாத்தா இந்தப் பன்னாட, உங்க ஏரியாவுல இருக்க பொண்ணுங்க டீடெயில் வேணுமான்னு கேட்டிருந்துச்சுங்க,



நானும் அத நம்பி, நம்ம சிரிப்பு போலீசுக்கு வேற உதவியா இருக்குமேன்னு நெனச்சு எங்க ஊரு சென்னைங்க, அங்க உள்ள பொண்ணுங்க டீட்டெயில் மட்டும் அனுப்புங்கன்னு ரிப்ளை பண்ணேன். அப்புறம் அனுப்புனாம் பாருங்க ரிப்ளை, கருமம் கருமம், சே...சே....  எல்லாம் கண்றாவி கண்றாவியா...சே.... அதுவும் சென்னையிலேயாம். இந்தக் கொடுமைய எங்க போயி சொல்ல?


நான் உடனே ரொம்பக் கடுப்பாயி திட்டி மெயில் போட்டேன். ஏண்டா இப்பிடி கேவலமான படமா அனுப்புற? அதுவும் நீ அனுப்புனது சென்னை பொண்ணுங்களே இல்லேடான்னு. ஆனா, அந்த  நாதாரி  அதையெல்லம்  கொஞ்சம் கூடக் கண்டுக்கவே இல்லங்க. அன்னில ஆரம்பிச்சதுங்க,  இன்னிக்கு வரைக்கும் ஒரு நாளு கூட கேப் விடல அந்த ராஸ்கல், தெனம் தெனம் அனுப்பிக்கிட்டே இருக்கான்.  நானும் ஒரு நாளாவது தப்பித் தவறி அவன் நம்ம சிரிப்பு போலீசுக்கு ஏத்த மாதிரி பொண்ணுங்க வெவரம் அனுப்பிடுவானோன்னு டெய்லி செக் பண்ணிக்கிட்டுதான் இருக்கேன். இன்னும் முடியலங்க.....

இதெல்லாம் பரவால்லை, இன்னொருத்தன் அனுப்புறாம்பாருங்க, அந்தக் கருமத்த பசங்ககிட்ட கூட சொல்லமுடியாதுங்க, அப்பிடி ஒரு கேவலமான மேட்டர, அந்த நாதாரி வேல மெனக்கெட்டு எனக்கு டெய்லி அனுப்புதுங்க. நானும் தெரியாமத்தான் கேக்குறேன், இந்தப் பன்னாடப் பரதேசிங்களுக்கு வேற வேலையே இல்லையா?

இதுல வேற நம்ம பட்டாபட்டி, மங்குனி எல்லோருக்கும் மெயில்லேயே 1000 கோடி, 2000 கோடின்னு  கொடுக்குறானுங்களாம், நமக்கு ஒரு பயபுள்ளையும் அந்த மாதிரி அனுப்ப மாட்டேங்கிறானுகளே. (ஒரு வேள நாம பிரபல பதிவர் இல்லேன்னு அவனுகளுக்கும் தெரிஞ்சுடுச்சோ?)  நமக்கு மெயில் அனுப்புற நாதாரிகள்லாம் சொல்லி வெச்சா மாதிரி கோக்குமாக்காவேதான் அனுப்புறானுங்க. இவனுகளால, இப்பல்லாம் பக்கத்துல யாரையும் வெச்சுக்கிட்டு மெயில் ஓப்பன் பண்றதே இல்லீங்க...!


அப்புறம் உங்களுக்கும் யாராவது மெயில்ல 1000 கோடி பணம் கொடுத்தாங்கன்னா (கொடுப்பாங்க......), எனக்கும் கொஞ்சம் கொடுத்து ஹெல்ப் பண்ணுங்ணா, உங்க வசதிக்காக கீழ என்னோட பேங்க் டீட்டெயில்ஸ் கொடுத்திருக்கேன், அப்பிடியே பொத்துனாப்பல் ட்ரான்ஸ்பர் பண்ணிடுங்க, சரியா?

கணக்காளர் பெயர்: பன்னிக்குட்டி ராம்சாமி
கணக்கு எண்: 88888 88888 88888
பாஸ்வெர்ட்: ********
PIN நெ.:****
வங்கி: பேங்க் ஆப் 'ஆப்பு'ரிக்கா, உகாண்டா கிளை

 இந்த டிடி, ட்ரான்ஸ்பர், லொட்டு லொசுக்கு கமிசன்லாம் கழிச்சிட்டே அனுப்பிதொலைங்க.. என்ன தெரியுதா?


அப்புறம், ஒரு சின்ன ஹெல்ப்பு வேணும் சார்,  பிரபல பதிவர்களுக்கு வந்து கொண்டிருக்கும் இந்த 1000 கோடி, 2000 கோடி மெயில் எனக்கும் வர்ர மாதிரி ஏதாவது பண்ணமுடியுமா சார்?


!

Monday, December 6, 2010

வலைச்சரத்தில் நான்........!





எல்லோரும் ஒழுங்கா அப்பிடியே வலைச்சரத்துக்குப் போங்க.....!
ஏன்னா நம்ம பன்னிதான் இந்த வாரம் ஆசிரியராம்...!
போ...போ...போய்க்கிட்டே இரு.........!



நாங்களும் அங்கேதான் போறோம், நீங்க வரலியா?

(நன்றி சுரேஷ் கண்ணன் சார், புகைப்படத்திற்கு!)

Sunday, December 5, 2010

சிரிப்பு போலீசின் சாதனை....!

நண்பர் சிரிப்பு போலீஸ் அவர்கள், பதிவுல டாக்டர். கேப்டன் ரசிகர் மன்றத் தலைவராக கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்டது எல்லோருக்கும் தெரியும் என்று எண்ணுகிறேன். பதவியேற்று ஒரே வாரத்திற்குள் அடுக்கடுக்காக டாக்டர். கேப்டனின் பற்றியும் அவர் படத்தினைப் பற்றியும் எழுதித் தள்ளி அவர் புகழை எட்டுத் திக்கும் பரவச் செய்துவிட்டார். அதன் விளைவாக மங்குனி அமைச்சர் போன்ற பிரபல பதிவர்களே டாக்டர். கேப்டனை பற்றி எழுதி ஓட்டு வாங்கும் நிலைக்குத் தள்ளப் பட்டார்கள்.

இன்னிலையில் தான் சிரிப்பு போலீஸ் அவர்கள் அரும்பெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார்.

அதை நிகழ்த்த எவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டார் என்பது என்னைப் போன்ற சிலருக்கு மட்டுமே தெரியும். மன்றத் தலைவராக பதவியேற்ற அடுத்த வினாடியே எங்கெங்கோ போன் கால்கள் செய்து பரபரபாக டாக்டர். கேப்டனின் புகழ் பரப்பும் வேலையில் இறங்கிவிட்டார். அவர் செய்த முதல் போன், தமிழகத்தின் அதிகாரம் வாய்ந்த குடும்பத்தைச் சேர்ந்த தொழிலதிபருக்கு.

அவரிடம் சென்று கெஞ்சி, காலில் விழுந்து காரியத்தைச் சாதித்தே விட்டார். விளைவு, முதற்கட்டமாக  இன்று மாலை 4.00 மணீக்கு சன் டீவியில் டாக்டர். கேப்டன் அவர்கள் நடித்த புத்தம் புது சூப்பர் ஹிட் திரைப்படம் "எங்கள் ஆசான்"  ஒளிபரப்பாகிறது. காணத்தவறாதீர்கள். இனி வாரந்தோறும் டாக்டர். கேப்டன் அவர்கள் படமே ஒளிபரப்பாகுமாறு நமது சிரிப்பு போலீஸ் அவர்கள் மேலிடத்தில் பேசி ஏற்பாடு செய்து விட்டார்கள்.

இசெய்தியைக் கேள்விப்பட்டதும் அதனை உங்கள் அனைவருக்கும் உடனே  தெரிவிக்க வேண்டும் என்ற கடமை உணர்ச்சியின் காரணமாகவும்,  சாதனை  புரிந்த சிரிப்பு போலீசை வாழ்த்தவும்  ஓடோடி வந்து அயராத பணிச் சுமைகளுக்கிடையிலும் பதிவிடுகிறேன்...!

எத்தகைய சாதனை...! எத்தகைய உதவி இது.....!  இதற்கு நாம் எல்லோரும் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்? சற்று சிந்தித்துப் பார்ப்பீர்........! இதுபோல் இன்னும் பல சாதனைகள் புரிய சிரிப்பு போலீசை வாழ்த்துவோம்.

டாக்டர். கேப்டனுடன் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுவிட்ட சிரிப்பு போலீஸ் அவர்களின் அயராத முயற்சிகளுக்கு ஆதரவு தாரீர் என்று வேண்டிக் கொண்டவனாக இதை முடித்துக் கொள்ளுகிறேன்.


வாழ்த்த வயதில்லை. எனவே வணங்குகிறேன்...சிரிப்பு போலீஸை.....!








வாழ்க டாக்டர். கேப்டன்  !                                                        வளர்க சிரிப்பு போலீஸ்!

புகைபட உதவிக்கு நன்றி எஸ்.கே
!

Wednesday, December 1, 2010

லிவிங் டுகெதருக்கு நீங்கள் லாயக்கா? தெரிந்துகொள்வது எப்படி? (18+)

லிவிங் டுகெதெரப் பத்தி நம்மாலுக எழுது எழுதுன்னு எழுதி் கிழிச்சு, தொவச்சு, கசக்கிப் புழிஞ்சு காயப்போட்டுட்டாங்க. ஏதோ கொஞ்சம் நஞ்சம் வெளங்குனவங்களையும் போட்டு நல்லாக் கொழப்பிக் குட்டைய கலக்கி விட்டாச்சு. இப்படியே போயிக்கிட்டு இருந்தா அப்புறம் கலாச்சாரம் என்ன ஆகுறதுன்னு ரொம்பக் கவலையாப் போச்சுங்க!

கலாச்சாரம், லிவிங் டுகெதெரப் பத்தி, எழுதுனவங்க எல்லாரும், ஒரு முக்கியமான விஷயத்த மறந்துட்டாங்க. யார், யாருக்கு, லிவிங் டுகெதர் பொருந்தும், யார் யாருக்கு கலாச்சாரம் தான் சரின்னு யாருமே சொல்லலை. இதுக்கிடையில, நம்ம சர்வே முடிவுகள் வேற நாம அபாயகட்டத்த நோக்கிப் போயிக்கிட்டு இருக்கோம்னு சொல்லுது! அதுனால நம்ம ஆராய்ச்சிய தீவிரப் படுத்தி, யார் யாருக்குலாம் லிவிங் டுகதெர் பொருத்தமா இருக்கும்னு கண்டுபுடிக்கிறதுக்காக ஒரு டெக்னிக்க  உருவாக்கியாச்சு.

வழக்கம்போல டெஸ்ட்டுதான் (ஆரம்பிச்சுட்டான்டா...!)... ஆனா இதுல ரெண்டு ஸ்டேஜா வெச்சசிருக்கேன். (எல்லாம் ஒரு டெவலப்மென்ட்டுதான் ஹி..ஹி..!)

1. பிரிலிமினரி
2. மெயின்

ரெண்டையும் பாஸ் பண்ணிட்டீங்கன்னா, உங்களுக்கு எது பொருத்தம்னு கரெக்டா தெரிஞ்சுடும்.

சரி போவமா (டெஸ்ட்டுக்குத்தான்.......!)


பிரிலிமினரி டெஸ்ட்:

1. ஒட்டகத்தை எப்படி ரெஃப்ரிஜ்ரேட்டருக்குள்ள (ஃப்ரிட்ஜ்தான் ஹி..ஹி.....!) வைக்கிறது?

யோசிங்க......
......
.......

யோசிங்க.......
......
......

என்ன தெரியலியா...? ஏன் சார் இப்படித் தேவையில்லாம காம்ப்ளிக்கேட் பண்றீங்க?  ஃப்ரிட்ஜ் கதவத் தொறந்து    ஒட்டகத்த உள்ள வெச்சிட்டு கதவ சாத்த வேண்டியதுதானே...!

சரி சரி, நெக்ஸ்ட் கொஸ்டின் போவோம், மனச திடப்படுத்திக்குங்க.....!


2. யானையை ஃப்ரிட்ஜுக்குள் வைப்பது எப்படி?

....
....
....
என்னது, ஃப்ரிட்ஜ் கதவத் தொறந்து    யானைய உள்ள வெச்சிட்டு கதவ சாத்தனுமா?

சாரி ராங் ஆன்சர்.....

நல்லா யோசிங்க.....
...
...
யோசிங்க........
.....

.....

சரி இதையும் நானே சொல்லித் தொலையறேன்....!  ஃப்ரிட்ஜத் தொறந்து மொதல்ல ஒட்டகத்த வெளிய எடுக்கோனும், அப்புறம் யானைய உள்ள வெக்கோனும்.... என்ன புரியுதா?

ஹி...ஹி....! வேறவழி ... ? நெக்ஸ்ட்டு என்னான்னு பாப்போம்!


3. காட்டு ராஜா சிங்கம் எல்லா அனிம்ல்ஸையும் கூப்புட்டு ஒரு பெரிய மீட்டிங்க் போட்டுச்சாம். கரெக்டா எல்லா மிருகமும் வந்துடுச்சு, ஒண்ணு மட்டும் வரல, அது எது, ஏன்?

....
யோசிங்கப்பு.....

நல்லா....

இன்னும்....


என்னது இதுவும்  தெரியலையா.....

சரி..சரி.. இதுவும் நாந்தான் சொல்லனுமா?

யானைதான்யா அந்த மீட்டிங்குக்குப் போகாத மிருகம்...!  அது எப்பிடி சார் போகும்...நீங்கதான் அத ஃபிரிட்ஜுக்குள்ள வெச்சுட்டீங்களே? என்ன சார் இது யானைய ஃப்ரிட்ஜ் உள்ள நீங்களே வெச்சிட்டு இப்படி அநியாயமா தெரியாதுன்னு சொல்றீங்க?

சரி சரி பீலீங்ஸ கன்ட்ரோல் பண்ணிக்கிட்டு அப்பிடியே நாலாவது கேள்விக்குப் போவோம்!


4. நீங்க ஒரு ஆத்தக் கடக்கனும், உங்களுக்கு நீச்சலும் தெரியும். ஆனா அந்த ஆறு முழுக்க பயங்கர முதலைகள் வாழ்ற இடம். இப்போ என்ன பண்ணுவீங்க?
(உங்ககிட்ட போட் எதுவும் கிடையாது, ஞாபகம் வெச்சுக்குங்க!)

என்ன..யோசிக்கலையா... (எப்படியும்  நான் சொல்லிடுவேன்னு தெகிரியம்....?)

ம்ஹும் மொதல்ல நீங்களே யோசிங்க.....அப்புறம் நான் சொல்றேன்....

....
...
...
...
..

சரிப்பா நானே சொல்லிடறேன்.

முதலைக தான் சிங்கம் கூப்பிட்ட அனிமல்ஸ் மீட்டிங்குக்கு போயிடுச்சுல்ல, அப்புறம் என்ன?  நீங்கபாட்டுக்கு ஜாலியா நீந்திப் போகவேண்டியதுதானே... ?


பொறுமை.....பொறுமை.. இப்படியெல்லாம் உணர்ச்சி வசப்படக்கூடாது, மொதல்ல கல்ல கீழ போடுங்க.. அமைதியா உக்காருங்க....  கண்ணத் தொடைங்க.....! இன்னும் மெயின் டெஸ்ட்டுக்கே போகல, அதுக்குள்ள இப்படிப் பண்ணா எப்படி?

பிரிலிமினரி யாரும் பாஸ் பண்ணியிருக்க மாட்டீங்க, தெரியும்(பண்ணியிருந்தாலும் ஒத்துக்கவே மாட்டேன்.. ஹி...ஹி...!), அதுனால எல்லாரும் அப்பிடியே மெயின் டெஸ்ட்டுக்குப் போங்க

மெயின் டெஸ்ட்:
கிழ உள்ள படத்த நல்லா உத்துப் பாருங்க.


படத்துல எத்தன டால்பின்ஸ் இருக்குன்னு கரெக்டா எண்ணனும்....!  5 செகண்டுக்குள்ள எண்ணி முடிக்கனும்..... ஆமா!

டால்பின்சை சரியாக கண்டுபிடித்துவிட்டவர்களுக்கு:
வெரிகுட்... கெளம்புங்க சார்,  போயி சீக்கிரமா ஒரு ஆளப் புடிங்க சார், லிவிங் டுகெதருக்கு.....!
(எத்தனை டால்பின்ஸ் என்று கன்பர்ம் பண்ண விரும்புபவர்கள்.... கரெக்ட்..... அதேதான்.....  ரூபாய் 999  முன்பணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்!)

மற்றவர்களுக்கு:
என்னது டால்பினே தெரியலியா....  ஏதோ ஏடாகூடமா தெரியுதா? சாரி சார், உங்களுக்குக் கலாச்சாரம்தான் லாயக்கு.... லிவிங் டுகதரையெல்லாம் மூட்ட கட்டி வெச்சிட்டு, போயி கல்யாணத்தப் பண்ணுங்க... சார்....!


சரி கடைசியா ஒரு கொசுறு கேள்வி:



நம்ம அனுஷ்கா லிவிங் டுகெதருக்குக் கூப்பிட்டா போவிங்களா?

அ) போவோம்னு சொல்றவங்க... பாசிட்டிவ் ஓட்டுப்போடுங்க.....

ஆ) போகமாட்டோம்னு சொல்றவங்க......

வெயிட் வெயிட்.....

நீங்களும் பாசிட்டிவ் ஓட்டுதான் போடூறீங்க (நான் என்ன மங்குனியா? பிச்சிபுடுவேன் பிச்சி!) ஓட்டப் போட்டுட்டு, சுட்டி டீவில டோராவின் பயணங்கள் ஸ்டார்ட் ஆகப் போவுது, சீக்கிரமாப் போயி குச்சி முட்டாய சப்பிக்கிட்டே எஞ்சாய் பண்ணுங்க....!

பி.கு.: அனுஷ்கா பிடிக்காது(!) என்று சொல்பவர்கள் (அப்பிடி யாரும் இருக்கீங்களா?)  மற்றவர்களை வைத்தும் ஓட்டுப் போடலாம்! மேலும் அது யார் என்று கமென்ட்டில் தெரிவித்து இன்புறலாம்!




!